கோ
டை காலம் தொடங்கிவிட்டது. வனங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோகும். இரையையும் நீரை யும் தேடும் விலங்குகள் ஊரை நோக்கி திரும்பும். அவற்றில் சில சாலையை கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டி பலியாகும். இவையெல்லாம் அவ்வப் போது நடக்கும் வழக்கமான சம்பவங் களாகிவிட்டன.
விலங்குகளைக் காக்க என்ன வழி என யோசித்து ஒரு புதுமையான திட்டத்தை தொடங்கியுள்ளனர், மதுரை திருநகரைச் சேர்ந்த ஊர்வனம் அமைப்பினர். 15 இளைஞர்களின் தன்னார்வத் தொண்டில் இந்த அமைப்பு இயங்குகிறது. காயத்துக்குள்ளாகும் பாம்புகள், மயில்கள், குரங்குகள், மான் உயிரினங்களை மீட்டு முதலுதவி அளித்து வனத்துறை உதவியோடு மீண்டும் அவைகளை காட்டுக்குள் விடும் பணியை செய்கிறது இந்த அமைப்பு.
மதுரை மாவட்ட வனத்தையொட்டிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளுக்கும் விலங்குகளுக்கும் இவர்களால் மறுவாழ்வு கிடைத்துள்ளது. இப்போதும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க இவர்களைத்தான் அழைக்கின்றனர் சுற்றுவட்டார மக்கள்.
திருப்பரங்குன்றத்தின் பின்புறம் தென்பரங்குன்றத்தில் உள்ள மலையடிவாரம் மயில், குரங்கு, பாம்புகள், மர நாய்கள், ஆந்தை மற்றும் ஏராளமான பறவைகளின் புகலிடமாக திகழ்கிறது. அங்கு விலங்குகள் நீர் அருந்துவதற்காக 3 தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். கோடை தொடங்கிவிட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்து வாரத்தில் 2 நாட்கள் தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர் ஊர்வனம் அமைப்பினர். விலங்குகளின் வசிப்பிடத்துக்கே சென்று உதவும் இவர்களை பாராட்டாதவர்கள் பாக்கி இல்லை.
அதுமட்டுமின்றி மதுரையில் பாழடைந்த பயணிகள் நிழற்குடையை பராமரிப்பது, மரக்கன்றுகள் நடுவது போன்ற சமூகப்பணிகளையும் செய்கின்றனர். இவர்களுடைய பன்முக சேவையால் ஈர்க்கப்பட்ட திருநகரைச் சேர்ந்த பெரு விவசாயி ஒருவர், தனது 15 சென்ட் இடத்தை இம்மையத்துக்கு வழங்கினார். அந்த இடத்தில் தற்போது வனவிலங்குகள் முதலுதவி அவசர சிகிச்சை மையத்தை கட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் விலங்குகளுக்கென தன்னார்வலர்களால் அவசர சிகிச்சை மையம் கட்டுவது இதுவே முதல் முறை.
ஊர்வனம் அமைப்பின் பி.ஆர்.விஸ்வநாதனிடம் பேசினோம். “வனவிலங்குகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துகிறோம். பாம்புகளை எப்படி மீட்பது, மயில், பாம்பு, பறவைகள், குரங்குகள், மான்களுக்கு காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி சிகிச்சையளிப்பது என்பதை சொல்லிக் கொடுக்கிறோம்.
பொதுமக்களிடம் நன்கொடை பெற்று விலங்குகளுக்கான முதலுதவி சிகிச்சை மையத்தை கட்டி வருகிறோம். காயம்பட்ட விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து, பின்னர் வனத்துறை உதவியுடன் அவற்றை காட்டில் கொண்டு போய்விடுவோம்” என்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பது என் பது காடுகளை காப்பதில்தான் இருக்கிறது. காடுகள் என்பது வெறும் காடுகள் அல்ல, அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். மக் கள் சேவை செய்பவர்களை நாம் பாராட்டுவது எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு மாக்கள் (விலங்குகள்) சேவையும் முக்கியம்தானே!
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
14 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago