கு
ப்பை மேலாண்மை மற்றும் கழிப்பறையின் அவசியம் குறித்து பலரும் பல விதமான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க, பெண் ஐஏஎஸ் அதிகாரியான கவிதா ராமு அரிதாரம் பூசி எடுத்த அவதாரம் வித்தியாசமானது. விழிப்புணர்வு பாடல் வரிகளுக்கு குழுவினருடன் நடனமாடி அதை படமாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட, ‘சும்மா லைக் பிச்சுக்கிச்சு‘.
குப்பை மேலாண்மை, திறந்தவெளியில் அசுத் தம் செய்வதை தடுக்க கழிப்பறைகளைக் கட்டுவது போன்ற திட்டங்கள் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கிய சென்னை போன்ற நகரங்களில், சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியில் இறங்கினார் அருங்காட்சியகங் கள் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு. மக்களுக்கு எளிதில் புரியும் வகையி லான வரிகளுடன் கூடிய பாடலுக்கு, அவர் நடனமும் ஆடி, வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்று, வைரலாக பரவியது. இதை https://goo.gl/kJTg3Z என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.
‘சுத்தம் ஒன்றுதான் சோறு போடும்னு நம்ம முப்பாட்டன் சொல்லி வைத்த சொல்லு என்னாச்சு...’ என்று தொடங்கும் இந்த பாடல் 4.52 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்த முத்தான வரிகளுக்கு குழுவினருடன் அசத்தல் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் கவிதா ராமு. இந்த பாடல் காட்சிகள் மாமல்லபுரத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கவிதா ராமுவிடம் கேட்டோம். அவர் கூறும்போது, “பெண்ணுரிமையும் சுகாதார விழிப்புணர்வும் ஒன்று சேரும் மையப்புள்ளியான ‘இல்லம்தோறும் கழிப்பறை’ என்ற அடிப்படை தேவை இப்பாடலில் வலியுறுத்தப்படுகிறது. உலக மகளிர் தினத்தன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கான கருத்தாக்கத்தை நான் வழங்க, ரேவதி சங்கரனின் வரிகளுக்கு அதுல் குமார் இசையமைக்க, பின்னணி பாடகி சைந்தவி பாடியுள்ளார். நரேந்திர குமார் அமைத்துள்ள நடன அமைப்பில் லஸ்யா கவி நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி உள்ளேன். எனது சமூக விழிப்புணர்வு பணிகள் தொடரும்” என்கிறார் பொறுப்புடன்.
2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, தேர்தல் அதிகாரியாக இருந்தபோது,‘‘போடுவோம் ஓட்டு, வாங்க மாட்டோம் நோட்டு’’ என்ற பாடலை உருவாக்கி பல இடங்களில் நடனக் குழுவினருடன் இணைந்து நடனமும் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் எய்ட்ஸ், சுற்றுச்சூழல் தொடர்பான மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியுள்ளார்.
நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல பதவியோ அந்தஸ்தோ தடையில்லை என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் கவிதா ராமு. வாழ்த்துக்கள் மேடம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
4 days ago
மற்றவை
4 days ago
மற்றவை
7 days ago
மற்றவை
8 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
24 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago