உத்தரபிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) கட்சி விலகியது.
இதனை சமன் செய்யும் விதமாக, பாஜகவுக்கு நிஷாத் கட்சி கைகொடுத்து வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் மணிஷ் தீட்சித் கூறும்போது, “அமைச்சர் மேனகா காந்தியின் சுல்தான்பூர், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி உள்ளிட்ட உ.பி. கிழக்குப் பகுதி தொகுதிகளில் நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத் பாஜகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வார்.
இதற்கு அப்பகுதியில் நிஷாத் சமூக வாக்குகள் பாஜகவுக்கு பலன் தரும்” எனத் தெரிவித்தார்.
உ.பி.யில் சுமார் 17 சதவீதம் கொண்ட நிஷாத் சமூகத்தினர் அதன் கிழக்குப்பகுதியில் அதிகமாக உள்ளனர். உ.பி.யின் 17 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் ஒன்றான நிஷாத் சமூகத்தினர் தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கோரி வருகின்றனர்.
இந்த சமூகத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிஷாத், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறியவர். 2016–ல் தனியாக நிஷாத் கட்சியை துவக்கி 2017 உபி சட்டப்பேரவை தேர்தலில் 100 தொகுதியில் போட்டியிட்டார்.
ஒரே ஒரு தொகுதியில் வெற்றி
ஒரே ஒரு தொகுதியில் வென்றவர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக்கு ஆதரவளித்தார். சஞ்சயின் மகன் பிரவீன் குமார் நிஷாத், சமாஜ்வாதி சின்னத்தில் நின்று கோரக்பூரில் வென்றிருந்தார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி மாறியவர், பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால், பிரவீன் குமாருக்கு இந்தமுறை கோரக்பூரின் அருகிலுள்ள சந்த் கபீர் நகர் தொகுதியில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏவுடன் இணைந்த எஸ்பிஎஸ்பி கட்சி, 8 இடங்களில் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்களை பெற்றது.
இதனால், அக்கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு உ.பி.யின் கேபினட் அமைச்சர் பதவியும் கிடைத்தது. எனினும், மக்களவைக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என ஏப்ரல் 16-ல் என்டிஏவை விட்டு வெளியேறிய எஸ்பிஎஸ்பி, 38 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை என்டிஏவிற்கு நிஷாத் கட்சி சமன் செய்யும் என எதிர்பார்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
14 days ago
மற்றவை
22 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago