பிளஸ் 2-வை தொடர்ந்து பத்தாம் வகுப்பிலும் முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம்: ஓரம் கட்டப்பட்ட தேர்ச்சி சதவீத அறிவிப்பு பலகை

By இ.மணிகண்டன்

பிளஸ் 2 பொதுத் தேர்வை தொடர்ந்து 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம் மாநில தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

1986-ல் விருதுநகர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட காலத் திலிருந்தே பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாநில தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வந்தது. தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால், 2017-18-ல் 95.73 சதவீதத் தேர்ச்சிபெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்திலிருந்த விருதுநகர் மாவட்டம், கடந்த ஆண்டு 97.05 சதவீத தேர்ச்சி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு 94.44 சதவிகித தேர்ச்சிபெற்று 7-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதேபோன்று, 10-ம் வகுப்பு அரசு தேர்விலும் 1986-ம் ஆண்டு முதல் மாநில அளவில் முதலிடம் பெற்று வந்த விருதுநகர் மாவட்டம் 2011-12-ல் மூன்றாவது இடத்துக்கும், 2012-13-ல் ஐந்தாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

2013-14-ம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்ததால் நான்காம் இடத்துக்கும், தொடர் ந்து, 2014-15-ல் 97.98 சதவீதம் தேர்ச்சிபெற்று இரண்டாம் இடத்துக்கும் முன்னேறியது. 2015-16-ல் தேர்ச்சி சதவீதம் .17 குறைந்து விருதுநகர் மாவட்டம் மீண்டும் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், 2017-18-ல் 97.85 சதவிகிதம் தேர்ச்சிபெற்று முதலிடத்தையும், கடந்த ஆண்டு 98.50 சதவிகித தேர்ச்சிபெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 347 பள்ளிகளைச் சேர்ந்த 12,793 மாணவர்களும், 13,345 மாணவிகளும் என மொத்தம் 26,138 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 12,419 மாணவர்களும், 13,176 மாணவிகளும் என மொத்தம் 25,595 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 97.08. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73. மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 97.92.

இந்த ஆண்டு 98.53 சதவீதம் தேர்ச்சிபெற்று திருப்பூர் மாவட் டம் முதலாவது இடத்தைப் பிடித்துள் ளது. 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் இரண்டாவது இடத்தையும், 98.45 சதவீதத் தேர்ச்சிபெற்று நாமக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்தையும், 98.41 சதவீதம் தேர்ச்சிபெற்று ஈரோடு மாவட்டம் நான்காவது இடத்தையும், 98.08 சதவீதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஐந்தா வது இடத்தையும், 97.92 சதவிகித தேர்ச்சிபெற்று விருதுநகர் மாவட் டம், ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதோடு, விருதுநகர் மாவட்டத் தில் 90 அரசுப் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 49-ம், மெட்ரிக் பள்ளிகள் 59-ம் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளன.

கணிதத்தில் 23 மாணவர்களும், அறிவியலில் 47 மாணவர்களும், சமூக அறிவியலில் 97 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழில் 387 பேரும், ஆங்கிலத் தில் 243 பேரும், கணிதத்தில் 463 பேரும், அறிவியலில் 94 பேரும், சமூக அறிவியலில் 253 பேரும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி சதவீதம் மற்றும் தரவரிசை பட்டியல் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு விவரப் பலகை விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட் டிருந்த தேர்ச்சி சதவீத அறிவிப்புப் பலகை, கீழே இறக்கப்பட்டு அலுவலகத்தில் ஓரம் கட்டப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

9 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்