கேரளாவில் திருமணம் முடிந்த எட்டே மாதத்தில் விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர் நாராயணன் நம்பியார். ஜெயிலுக்கு போன பின் குடும்பத்துடன் தொடர்பற்று போனதால் அவரது மனைவி சாரதாவுக்கு மறுமணம் நடந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த நாராயணன் நம்பியாருக்கு இது தெரியவர அவரும் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு பிறகு நாராயணன் நம்பியாரையும், அவரது முதல் மனைவி சாரதாவையும் சொந்தங்கள் கூடி சந்திக்க வைத்தனர்.
தற்போது 90 வயதாகும் நாராயணன் நம்பியாரும், 85 வயதாகும் சாரதாவும் சந்திக்க கண்ணூர் அருகே சாரதாவின் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்தின் போது நாராயணனுக்கு 18 வயது, சாரதாவுக்கோ 13 வயதுதான். இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த 1946-ல் இவர்கள் திருமணம் நடந்தது. எட்டு மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்தது. நாராயணன் நம்பியாரும், அவரது தந்தை தளியன் ராமன் நம்பியாரும் அப்பகுதியில் பல்வேறு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 1946-ம் ஆண்டு கவும்பை பகுதியில் திடீரென விவசாயப் போராட்டம் வெடித்தது. அப்பகுதியை சேர்ந்த கரகட்டிதம் நாயனார் என்பவரின் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்திற்கு நாராயணன் நம்பியாரும், அவரது தந்தையும் சென்றிருந்தனர். போலீஸார் சுட்டதில் 5 விவசாயிகள் அதே இடத்தில் இறந்தனர். போலீஸாரின் திடீர் தாக்குதலால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் நாராயணன் நம்பியாரும், அவரது தந்தையும் போலீஸின் கையில் சிக்காமல் தப்பினர்.
திசைமாறிய வாழ்க்கைஅப்பாவையும், மகனையும் தேடி மலபார் போலீஸார் வீட்டுக்கு வந்தனர். அங்கு சாரதா மட்டுமே இருந்தார். அவரிடம் காவல்துறை கடினமான வார்த்தைகளை உதிர்த்தது. இருவரும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டை சேதப்படுத்தினர். உச்சகட்டமாக வீட்டுக்கே தீவைத்தனர். இருமாதங்களுக்கு பிறகு அப்பாவும், மகனும் போலீஸின் கையில் சிக்கினர். தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் வைத்தே தளியன் ராமன் நம்பியாரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். நாராயணன் நம்பியாரை கண்ணூர், சேலம் என அடிக்கடி சிறையை மாற்றிக்கொண்டே இருந்தனர்.
இதில் சாரதாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக, அவரை அவரது அப்பா தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சாரதாவுக்கு வேறு திருமணமும் செய்துவைத்தார். விதியும், போராட்டசூழலும் இவர்கள் வாழ்வை திசைமாற்ற 8 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் நாராயணன் நம்பியார். பிறகு வீட்டுக்குச் சென்றபோதுதான் சாரதாவுக்கு வேறு திருமணம் ஆனது தெரியவந்தது. நாராயணன் நம்பியாருக்கும் வேறு திருமணம் செய்துகொள்ள இருவருக்கும் தனித்தனியே குடும்பம் உருவானது.
சேர்ந்த குடும்பங்கள்அதன் பின்னர் இருவருக்கும் முற்றாக தொடர்பு இல்லாமல் போனது. இந்நிலையில் நாராயணன் நம்பியாரின் மருமகள் சாந்தா கவும்பாயி என்பவர், ‘டிசம்பர் 30’ என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் விவசாயிகள் போராட்டம் மற்றும் தனது மாமனார் வாழ்வில் நடந்தவை பற்றியும் பதிவு செய்திருந்தார். இந்த புத்தகத்தை சாரதாவின் மகன் பார்கவன் கேள்விப்பட்டிருக்கிறார். மேலும் நண்பர்கள் மூலம் இவர்கள் குறித்துத் தெரியவர பார்கவன் தன் தாய் சாரதாவையும், அவரது முதல் கணவர் நாராயணனையும் சந்திக்க வைக்க முடிவுசெய்தார். இவரது விருப்பத்துக்கு நாராயணன் குடும்பத்தினரும் உடன்பட்டனர்.
கண்ணூர் அருகே உள்ள பரசிங்கடவு பகுதியில் உள்ள பார்கவன் வீட்டில் சாரதா, நாராயணன் நம்பியார் சந்திப்பு நடந்தது. நாராயணனின் இரண்டாவது மனைவி 8 ஆண்டுகளுக்கு முன்பும், சாரதாவின் இரண்டாவது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் இறந்துவிட்டனர். இந்த சந்திப்பில் முதலில் அமைதியாக மட்டுமேஇருந்த சாரதா ‘’உங்க வீட்ல என்னை மகளைப் போலவே பார்த்துகிட்டாங்க” எனச் சொல்ல, தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுத்தார் நாராயணன் நம்பியார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
4 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago