பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து சட்டமாகி உள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, சமத்துவத்துக் கான இளைஞர்கள் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த விஷயம் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்ததுடன், மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
7 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
27 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago