இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய பகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டவாக்க அவை ஆகும்.

1.1.2007 அன்று வடமாகாண சபை உருவாக்கப்பட்டாலும், வடமாகாண சபைக்கு முதன்முறையாக, கடந்த 21.09.2013 அன்று தேர்தல் நடைபெற்று 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் ஆளுநர்களாக கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ந்து சிங்களர்களே பதவி வகித்து வந்தனர். நீண்ட காலத்­துக்குப் பிறகு, சமீபத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு முஸ்­லிம் ஒருவரை ஆளு­நராக நிய­மித்­த­து போன்று, வடக்கு மாகா­ணத்துக்கு தமிழர் ஒருவரை ஆளு­நராக நிய­மனம் செய்­ய வேண்டும் என்பது வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையாக இருந்தது.

பதவியேற்பு விழாஇந்நிலையில், ரெஜினோல்ட் குரேவுக்குப் பிறகு ஆளுநர் பதவிக்கு இலங்கைத் தமிழரான முனைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண புதிய ஆளுநராக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.

ஆளுநர் சுரேன் ராகவன் இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே உள்நாட்டு யுத்த சமாதான உடன்படிக்கை நேரங்களிலும், யுத்தத்துக்கு பிந்ததைய இலங்கையின் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டவர்.

அதிபரின் ஊடக பொறுப்பாளர்இவர் ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தது குறிபிடத்தக்கது.

பதவியேற்புக்கு பின்னர் சுரேன் ராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஒற்றுமைக்கு பாடுபடுவேன்இலங்கை மக்களின் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து, வடக்கு மாகாணத்தை முன்னேற்றமடையச் செய்வதே எனது நோக்கம். ஆளுநராகப் பொறுப்பேற்றதும் வடக்கு மாகாண அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

11 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்