என்பிஎப்சி, எஸ்எம்இ துறையினருடன் ஆர்பிஐ கவர்னர் ஆலோசனை நடத்த முடிவு

By பிடிஐ

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று தனது ட்விட்டர் பதிவில் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களுடன் இரண்டு கட்ட பேச்சு நடத்தியுள்ளார் சக்தி காந்த தாஸ்.

இதனிடையே ஐஎல் அண்ட் எப்எஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) பணப் புழக்கத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல சிறு, குறுந் தொழில் துறையினர் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கவர்னராயிருந்த உர்ஜித் படேல், சிறு, குறு தொழில் துறையினரின் பிரச்சினைகளை செவிமடுத்து கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவற்றையெல்லாம் போக்கும் வகையில் இவ்விரு பிரிவினரிடமும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார் தாஸ்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்படுவர் என்று தெரிகிறது.

பொதுத் தேர்தல் நெருங்க உள்ளதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடும் நிதி நெருக்கடியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவ முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

7 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

27 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்