தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. இந்த ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கவும், மின் இணைப்பு வழங்கவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிக மானோர் காயமடைந்தனர். ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அன் றைய தினமே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த அர சாணையை எதிர்த்து, ஸ்டெர் லைட் ஆலை நிர்வாகம், டெல்லி யில் உள்ள தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய தீர்ப்பாயம் நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த மாதம் 26-ம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான வாதங்களைக் கேட்டறிந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10-ம் தேதி அறிவித்தது. தீர்ப்பை அறிய ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆவலுடன் காத்திருந் தனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமை யிலான முதன்மை அமர்வு தனது தீர்ப்பை நேற்று வெளியிட்டது. அதன் விவரம்: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவற்றது மற்றும் நியாயமற்றதாகும். எனவே, வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டை ஏற்று தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
ஆலையின் உரிமத்தை புதுப் பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அபாய கரமான பொருட்களை கையா ளும் பணிக்கான ஒப்புதலையும் வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க சரியான வழிமுறை களை தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் 3 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். ஆலை தொடர்ந்து இயங்க மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.
தனி இணையதளம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க மூவர் குழு தெரிவித்துள்ள பரிந் துரைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இதனை மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கண்காணிக்க வேண்டும். சுற்றுச் சூழல் தொடர்பான மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனி இணையதளம் ஒன்றை ஆலை நிர்வாகம் உரு வாக்க வேண்டும். அதில் மாவட்ட நிர்வாகம், தமிழக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடனான இணைப்பு (லிங்க்) ஏற்படுத்த வேண்டும். மக்களின் குறைகள், நிவர்த்தி செய்யப்படுகிறதா என் பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
நிலத்தடி நீர் தரத்தை தொடர்ந்து ஆலை நிர்வாகம் கண்காணித்து, விவரங்களை தவறாமல் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதை பதிவேற்ற தவறும்பட்சத்தில் ஒவ் வொரு தவறுக்கும் ரூ.10 லட்சம் வீதம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும்.
மேலும், விதிகளை மீறி 3.5 லட்சம் டன் தாமிர கழிவு களை பட்டா நிலங்களில் கொட்டி யதற்காக ரூ.2.5 கோடியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை யத்தில் ஆலை நிர்வாகம் டெபாசிட் செய்ய வேண்டும். இப்பணத்தை சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கு சட்டப் பணிகள் ஆணையம் பயன்படுத்த வேண்டும்.
தாமிரக் கழிவு மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை அகற்ற கால நிர்ணயம் செய்து, இதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அகற்றாவிட்டால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும் ஆலை நிர்வாகமும் இணைந்து, விபத்து கால பாதுகாப்பு ஒத்திகைகளை அடிக்கடி நடத்த வேண்டும்.
ஆட்சியருக்கு உத்தரவு
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான சில பரிந்துரைகளை நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ரூ.100 கோடி முதலீடு
ஆலை சுற்றுப்பகுதியில் குடிநீர் விநியோகம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி செலவு செய்ய விரும்புவதாக ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணத்தை இப்பகுதி மக்களின் நலனுக்காக 3 ஆண்டுகளுக்குள் செலவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக, செயல் திட்டம் தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத் தின் ஒப்புதலைப் பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago