கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடர்வதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசின் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஜாதி, இருப்பிடம், வரு வாய் உள்ளிட்ட சான்றிதழ்கள் இன்று கணினி வழியாக மாற்றப்பட்டுவிட்டன. இருப்பினும், அந்தச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான களப் பணிமேற்கொண்டு, அனுமதியளிப்பதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்வது வருவாய் நிர்வாக அலுவலர்கள்தான்.
நகர்ப்புறத்தைவிட கிராமப்புறங்களில் இவர்கள் பணிகள் மிகவும் முக்கியமான தாகும். சான்றிதழ்கள் தவிர பட்டா, சிட்டா, அடங்கல் வழங்குதல், பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் கணக்கிடல், நிவாரணம் வழங்க ஒப்புதல் அளித்தல் ஆகியவையும் இவர்களின் முக்கிய பணிகளாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், தற்போது 9,500 பணியிடங்களில் மட்டுமே அலுவலர்கள் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், மாவட்ட அளவில் இடமாறு தல், பட்டப்படிப்பை தகுதியாக நிர்ணயித்தல், பொறுப்புப் பணிகளுக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக, பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களில் 50 சதவீதம் பேர், கடந்த 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வன் கூறும்போது, ‘‘நாங்கள் 25 நாட்க ளுக்கு முன்னதாகவே வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு கொடுத்துவிட்டோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தியபோது அவர், கூறும் உறுதியை அரசாணையாக வெளியிட முன்வரவில்லை. எனவேதான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்’’ என்றார்.
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் தற்போதுநிவாரணப் பணி கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கிராம நிர்வாகஅலுவலர்கள் இல்லாததால் அப் பகுதிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தற்போது பணியில் உள்ள வர்களில் 50 சதவீத விஏஓக்கள் வேலை நிறுத் தத்தில் உள்ளனர். அவர்களை அழைத்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்த பின்னரும், ஆவணமாகக் கேட்கின்றனர்.
முதல்வரிடமும் இதுதொடர்பாக தெரிவித் துள்ளோம். அவர்கள் இந்த நேரத்தில் போராட் டம் நடத்துவது தேவையில்லை. புயல்பாதித்த பகுதிகளில் நிவாரணம்வழங்கும்போது கிராம நிர்வாகஅலுவலர்கள் அனுமதி தேவைப் படுகிறது. அவர்கள் கோரிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை. படிப்படியாக நிறை வேற்றித் தர தயாராகஉள்ளோம். எனவே, வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
4 days ago
மற்றவை
9 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
28 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago