காங்கிரஸ் கட்சியுடன் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்ட தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நேற்று மாலை சரூர் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
தாஙகள் ஆட்சிக்கு வந்தால், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக முதல்வர் சந்திர சேகர ராவ் வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால், முதல்வரான பிறகு, தனக்கும், தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே அவர் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
அதேசமயத்தில், தெலங்கானா வில் அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் என ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அங்கிருந்தவர்கள், “உங்களுடைய திருமணம் எப்போது?” எனக் கேள்வியெழுப் பினர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “காங்கிரஸுடன் எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது” எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
6 days ago
மற்றவை
7 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago