ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்தில் மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும் ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகி யோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
சோனியா காந்தி உள்ளிட்டோ ரின் வேண்டுகோளின்படி, 2000-ம் ஆண்டு ஏப்ரலில் நளினியின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைத் தார். இதனிடையே தண்டனைக் குள்ளானவர்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கின் மீது 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது தவறு என்று கூறியதுடன் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இதையடுத்து, 25 ஆண்டுகளுக் கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி முடிவெடுத்து, மத்திய அரசின் ஆலோசனையைக் கோரியது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் விடுதலை முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கும் அனுப்பியது.
கடந்த 2015 டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தண்டனைக் குறைப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் இருக்கிறது என்றும் இந்த விஷயத் தில் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசின் சம்மதம் தேவை என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி தமிழக அரசு சார் பில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத் தில், "ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது. உச்ச நீதி மன்ற உத்தரவின்படி இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை" என்று கூறியிருந்தது. இந்த கடிதத்துக்கு மத்திய அரசு நீண்டகாலமாக பதில் அளிக்காததால், தமிழக அரசு மீண் டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இதையடுத்து, தமிழக அரசின் கடிதத்துக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் வி.பி.துபே தாக்கல் செய் துள்ள பதில் மனுவில், "ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை யும் விடுவிப்பது ஆபத்தான முன்னு தாரணத்தை ஏற்படுத்துவதுடன், சர்வதேச அளவில் பாதிப்புகளை உருவாக்கும். எனவே, அவர்களை விடுதலை செய்ய அனுமதிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கூறியதாவது:
தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது. ராஜீவ் கொலை இந்தியா பார்த்திராத கொடூர மனிதவெடி குண்டு சம்பவம். இந்த கொலையின் மூலம் இந்திய ஜனநாயகமே ஸ்தம் பிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், அப்போது நடக்கவிருந்த மக்களவை தேர்தல் மற்றும் சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களையே நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இந்த கொலை சம்பவத் தில் அப்பாவி போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட னர். பல நீதிமன்ற நடவடிக்கைகளுக் குப் பின்னரே அவர்களுக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது.
இந்த வழக்கில், அவர்களுக்கு தண்டனை வழங் கியதற்கான மிகப் பொருத்தமான காரணங்களை நீதிபதி தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள 4 வெளிநாட்டவர் மற்றும் அவர்களுக்கு உதவிய 3 இந்திய பிரஜைகளும் விடுதலைக்கு தகுதியானவர்கள் அல்ல. எனவே, தமிழக அரசின் முடிவில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கின் விசா ரணையை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மத்திய அரசின் இந்த முடிவால் 7 பேரையும் விடுவிப்பதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago