கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் முழுக்கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து நேற்று இரவு 10 மணி முதல் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. வரும் 40 நாட்களில் குறைந்தபட்சம் 50 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலில் நீர் வீணாவதை தடுக்க உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காவிரியின் குறுக்கே கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மேட்டூர் அணை கட்டி முடிக் கப்பட்டது. 120 அடி கொள்ளளவு உடைய மேட்டூர் அணை கட்டப்பட் டது முதல் தற்போது வரை 39-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணை யின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது. அணையின் 16 கண் மதகை உயர்த்தி வெளியேற்றப் படும் நீரின் அளவை கட்டுப்படுத்தி, அணையில் கூடுதலாக 2.23 டிஎம்சி நீரை ஓரிரு நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். நீர்வரத்து 80,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப் படும் நீரின் அளவு நேற்று நண்பகல் விநாடிக்கு 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிப் படியாக இரவு 8 மணி அளவில் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக வும் இரவு 9 மணி அளவில் விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடி யாகவும் இரவு 10 மணிக்கு 80 ஆயிரம் கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது.
இதில், அணையின் 8 கண் மதகு வழியாக 22,500 கனஅடி நீரும் 16 கண் மதகு வழியாக 57,500 கனஅடி நீரும் வெளியேற்றப் பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்து நேற்று இரவு நிலவரப் படி விநாடிக்கு 80,000 கனஅடி யாக இருந்தது. அணை நிரம்பி விட்டதால், அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக் கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் எந்நேரமும் மீட்புப் பணியில் ஈடுபட தயாராக இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், தீய ணைப்புத் துறையினர் காவிரி கரையோரக் கிராமங்களில் கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில காவிரி மற்றும் அதன் துணை ஆறு களுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி யுள்ளதால் அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் வழியாக தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வரு கிறது. இதனால், அடுத்து வரும் 40 நாட்களும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தபட்சம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தொடர வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணை நிரம்பிவிட்ட தால் அடுத்த 40 நாட்களும் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படும் நிலையால் உபரிநீர் பெரும் பங்கு கடலில் கலக்கும். இதன்படி, அடுத்து வரும் 40 நாட்களில் மொத்தம் 80 முதல் 100 டிஎம்சி நீர் கடலில் கலக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆற்று நீர் கடலில் கலக்க வேண்டும் என்பது இயற்கை. ஆனால், காவிரி ஆற்றை நம்பி சுமார் 20 மாவட்டங்கள் குடிநீர் தேவைக்கும் 12 மாவட்டங்கள் பாசனத்துக்கும் இந்த நீரையும் நம்பியுள்ளன. இதனால், வருங்காலங்களில் உபரிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை வகுக்க வேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago