தெலங்கானா மாநிலத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு அரசு உத்தர விட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டி லிங்காலு எனும் பகுதியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஊரின் மையப்பகுதியில் இந்த தொழிற்சாலை நடத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த தொழிற்சாலைக்கு முன்பாக, முறையான அனுமதியின்றி பட்டாசு கடையும் இயங்கி வந்துள்ளது.
வழக்கம்போல் இந்தத் தொழிற்சாலையில் நேற்று காலை தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து நாலா புறமும் சிதறின.
அதில் தொழிற்சாலையில் தீப்பற்றியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர், அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் வாரங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பட்டாசு தொழிற்சாலை முறையான அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளரான ‘பாம்ப்’ குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
ரூ. 5 லட்சம் நிதியுதவி
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
5 days ago
மற்றவை
5 days ago
மற்றவை
8 days ago
மற்றவை
9 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago