வர்த்தக ரீதியில் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பது, கடல் மற்றும் நன்னீரில் வாழும் உயிரினங்களை ஆய்வு செய்து, குஞ்சு பொறிப்பகங்கள் அமைத்துக் கொடுப்பது. அதன்மூலம் நாடு முழுவதிலும் தேவை யான விவசாயிகளுக்கு மீன் பண்ணைகள் அமைக்க குஞ்சுகள் கொடுப்பது என்பன உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்புகளும் செயல் முறை விளக்கங்களும் இங்கு அளிக்கப்படுகின்றன.
இதன் செயல்பாடுகள் குறித்து மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.கந்தன் கூறியது:
இந்த மையம் உட்பட நாடு முழுவதும் 14 மையங்கள் உள்ளன. இந்த மையத்தில் மத்திய அரசின் NABL தரச்சான்று பெற்ற 2 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. வேறு எந்த ஆய்வுக் கூடத்துக்கும் இந்தத் தரச்சான்று வழங்கப்படவில்லை. கல் நண்டு என சொல்லக்கூடிய சதுப்பு நிலப் பகுதிகளில் வளரும் நண்டுகள் உலக அளவில் 4 வகைகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இங்குள்ள மரபணு சோதனை ஆய்வுக் கூடத்தின் மூலம் 2 வகை என இறுதியாக நிறுவப்பட்டுள்ளது. இது, 2013-ம் ஆண்டு சர்வதேச அளவிலான கருத்தரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாற்று வகை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மையத்தின் தலைவர் ஜெயதிலக் ஐஏஎஸ் அளிக்கும் அறிவுறுத்தலின்படி, தற்போது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் திறந்தவெளி குட்டையில் மீன் வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதுவரை இம்மையத்தின் மூலம் மீனவர்கள், மீன் வளர்ப்பு விவசாயிகள், சுய உதவிக் குழுவினர், அரசு சாரா அமைப்புகள், அரசு நிறுவனங்களைச் சேர்ந்தோர், ஆய்வு மாணவர்கள் என உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு பயிற்சி வகுப்புகளும் செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள மையத்தில் மட்டும்தான் கல் நண்டு குஞ்சு பொறிப்பகம் உள்ளது.
இம்மையத்தில் மீன் குஞ்சுகள் வாங்கி மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் திருவாரூர் மாவட்டம் சித்திரையூர் கே.செந்தில்குமரன் கூறியபோது, “தொடுவாய் கிராமத்தில் உள்ள குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து கொடுவா மீன்குஞ்சுகள் வாங்கி வளர்த்து வருகிறேன். அவர்கள் சொல்லும் தொழில் நுட்பத்தின்படியும் ஆலோசனைகளின்படியும் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சுமார் 8 ஏக்கர் பரப்பில் திறந்த வெளி குட்டை முறை மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன்.
ஆண்டுக்கு 20 முதல் 30 டன் வரை அறுவடை செய்கிறேன். மீன் குஞ்சுகள், மீன் உணவு கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவுபோக, ஏக்கருக்கு அதிகபட்சமாக சுமார் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago