உ
யிர் என்பது ஒன்றுதான். மனிதர்கள், விலங்குகள் என அது உள்ளிருக்கும் உருவங்கள்தான் வேறாக இருக்கின்றன. மனிதர்கள் சாலையில் அடிபட்டுக் கிடந்தாலே உச்சு கொட்டி நடையை கட்டும் சக மனிதர்களுக்கு மத்தியில், பிராணிகளின் உயிரைக் காக்க போராடுகிறார்கள் மதுரையைச் சேர்ந்த ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் மதுரை’ ஃபேஸ்புக் நண்பர்கள்.
இவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள். சிலர் பகுதி நேரமாகப் பணிபுரிபவர்கள். ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் மதுரை’ குழுவுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் பிரபாகரன் நாகராஜன். எம்.காம்., படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்த வேலைக்கு முழுக்குப் போட்டவர் தெருவோரங்களில், ரோடுகளில் அடிபட்டுக் கிடக்கும் பிராணிகளை மீட்கும் பணியை நண்பர்களுடன் செய்யத் தொடங்கினார்.
கடந்த 2 ஆண்டுகளில் அணில், பறவைகள், தெருவோர நாய்கள், பூனைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களின் உயிர்களை காத்திருக்கிறார்கள்.
பிரபாகரன் நாகராஜனிடம் பேசினோம். “ரோட்டோரம் நோய்வாய்ப்பட்டோ அல்லது வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடும் உயிரினங்களை முதலில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோம். அங்கு முடியாது என்றால் அடுத்து தனியார் பெட் கிளினிக் கொண்டு செல்வோம். ஒரு சதவீதம் பிழைக்க வாய்ப்பிருந்தால் கூட அதற்கு சர்ஜரி செய்து பிழைக்க வைத்து மற்றவர்களுக்கு வளர்க்க கொடுத்துவிடுவோம்.
வெளிநாட்டு நாய்கள் குட்டியாக இருக்கிற வரைதான் அழகாக இருக்கும். அவற்றை காலை, மாலை வாக்கிங் கூட்டிட்டு போக வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். தேவையானது கொடுக்க வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளால் அக்கம்பக்கத்தில் சிலருக்கு தொந்தரவு ஏற்படும். அது சத்தமிடுவது வளர்ப்பவர்களுக்கே பிடிக்காது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பராமரிக்க முடியாது என்ற கட்டத்தில் பிராணிகளை ரோட்டில் விட்டுச் செல்வது அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பிராணிகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. ஒரு போன் செய்தாலோ, ஃபேஸ்புக்கில் அடிபட்டு கிடக்கும் விலங்கின் வீடியோவை போட்டாலோ போதும், மீட்க பலரும் ஓடோடி வருவார்கள்.
மதுரை போன்ற ஊர்களில் இன்னும் அதுபோன்ற விழிப்புணர்வு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
பொதுவாக நாய்களை ஆசைக்காகவே வளர்க்கிறார்கள். சிலர் அவற்றின் குட்டிகளை விற்று வருமானம் பார்க்கிறார்கள். குட்டி ஈன முடியாவிட்டால் அவைகளின் கடைசி புகலிடம் ரோடுதான்.
சில நேரங்களில் வணிக நோக்கத்தில் ஹைபீரிட் பெண் நாய்களை கட்டிப்போட்டு, ஆண் நாயுடன் கட்டாய இனப்பெருக்கம் செய்ய வைக்கிறார்கள். இது ஒரு வகையில் பாலியல் வன்முறைதான். பிராணிகளை நேசிப்பவர்கள் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை” என்கிறார் பிரபாகரன் நாக ராஜன்.
செல்லப் பிராணிகளை வளர்க்க முடியாவிட்டால் ரோட்டில் விடாமல், இவர்களை 77084 33659 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இவர் களிடம் கொடுக்கலாம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
14 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago