வ
ரலாற்றுச் சுவடுகள் கொண்ட பழவேற்காடு மற்றும் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல்மின் நிலையங்கள் அரசு மீன் வளக்கல்லூரி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதுதான் பொன்னேரி நகரம்.
சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் இந்த வட்டாரத்தின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்கிறது இங்குள்ள பொன்னேரி அரசு பொது மருத்துவமனை. சிகிச்சை முறையிலும் சிறந்த பராமரிப்பி லும் தனித்து நிற்கிறது.
இங்குள்ள கரும்பலகையில் தினமும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு வந்தது. இப்போது அறிவை விரிவாக்கும் மற்றொரு நடவடிக்கையிலும் மருத்துவமனை இறங்கியுள்ளது. அதா வது மருத்துவமனை வளாகத்துக்குள் புதிதாக நூலகம் ஒன்றை திறந்திருக்கிறது.
பிரசவம் உள்ளிட்டவற்றுக் காக வரும் உள் நோயாளிகளும் அவர்களுக்கு துணைக்கு இருப்பவர்களும் இந்த நூலகத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நாள் மருத்துவமனையில் இருந்து ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு புத்துணர்வையும் பல் வேறு விழிப்புணர்வையும் இந்த நூலகம் தருகிறது. பொழுது பயனுள்ளதாக கழிகிறது.
இதுகுறித்து, தலைமை மருத்துவர் (பொறுப்பு) அனுரத்னா நம்மிடம் கூறும்போது, “நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் புறநோயாளிகளும் நூறு உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பா லோர் தங்களுக்கு அரசு வழங் கும் நலத் திட்ட உதவிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, நாட்டு நடப்பு குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லாதவர்களாக உள்ளனர்.
ஆகவே, மருத்துவமனைக்கு உள்நோயாளிகளாக வரும் பெண்கள், நூல்களை படித்து, தங்களை மேம்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என யோசித்ததன் விளைவுதான் இந்த நூலகம். மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித் துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஏற்படுத்தப்படும் வாசிப்பு பழக் கம் வீட்டுக்குச் சென்ற பிறகும் தொடரும்” என்றார். உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை கிடைப்பது அநேகமாக இங்கு தான்.
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
2 days ago
மற்றவை
13 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
25 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago