தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் புதிது, புதிதாக அறிமுகமாகும் விளையாட்டுகளையும், அதற்கான விதிமுறைகளையும் தொகுத்து கையேடாக அச்சிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, அதை உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது இவர்களது பணி.
கல்வி ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே குறுமைய அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகளை இவர்கள் நடத்த வேண்டும். கிரேடு-1 உடற்கல்வி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த உடற்கல்வித் துறையினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போதைய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம், முன்பு மண்டல உடற்கல்வி ஆய்வாளர் என்ற பெயரில் இருந்தது. 4 முதல் 5 மாவட்டங்கள் வரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்கள் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
மாணவர்களுக்குப் போட்டிகளை நடத்துவதற்கு ஆண் ஆய்வாளர் ஒருவரும், மாணவிகளுக்குப் போட்டிகளை நடத்துவதற்கு பெண் ஆய்வாளர் ஒருவரும் இப்பதவியை வகித்து வந்தனர். 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும், புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.
பின்னர், மாவட்டந்தோறும் பணியில் மூத்த கிரேடு-1 உடற்கல்வி இயக்குநர்கள் பணி நிரவல் மூலமாகவும், பொறுப்பு அலுவலர்களாகவும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். நியமன உடற்கல்வி ஆய்வாளர்கள் ஓய்வு பெற்றதும், உடற்கல்வி இயக்குநர்களுக்கு பொறுப்புப் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பு உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் என்ற நிலை வந்துவிட்டதால், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் மூத்த நியமன உடற்கல்வி ஆய்வாளரே, பதவி உயர்வு மூலம் முதன்மை உடற்கல்வி ஆய்வாளராக முடியும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பு உடற்கல்வி ஆய்வாளர்களே இருப்பதால், வரும் காலங்களில் அந்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பதவியும் பொறுப்பு பணியிடமாக மாறிவிடும்.
இந்த பொறுப்பு பணியை பள்ளி கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் யாரேனும் வகிக்க நேரிட்டால், தகவல் தொடர்பில் இடையூறு ஏற்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களுக்கு, தகுதியுடைய உடற்கல்வி இயக்குநர்களை நியமிக்க வேண்டும். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். மாநிலத் தகுதி பெற்றுள்ள உடற்கல்வி ஆய்வாளரை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி, திறமைசாலிகளை அடையாளப்படுத்தி, அவர்களை மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டுவரும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியிடத்தை நிரப்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago