சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக இளைஞரை தாய், தங்கை கண் எதிரில் இரும்புக் கம்பத்தில் வைத்து போலீஸார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம், ஜானகிராமன் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (21). இவர் தேனாம்பேட்டையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ம் தேதி தனது தாயார் சங்கீதா (40), தங்கை ரேவதி (15) ஆகியோருடன் பைக்கில் இவர் தியாகராய நகருக்கு சென்றுள்ளார்.
உஸ்மான் சாலையில் போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சுரேஷ், சிறப்பு எஸ்ஐ ஜெயராமன் மற்றும் காவலர்கள் அப் போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பிரகாஷின் பைக்கைத் தடுத்து நிறுத்திய அவர்கள், அவர் ஹெல்மெட் அணியாததைப் பற்றியும் ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்ததைப் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த பிரகாஷ், அவசரமாக வந்ததால் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தனது தங்கை சிறுமி என்பதால் 3 பேர் ஒரே பைக்கில் வந்ததாகவும் கூறியுள்ளார்.
பிரகாஷின் பதிலை போலீஸார் ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எஸ்ஐ சுரேஷ், சிறப்பு எஸ்ஐ ஜெயராமன் இருவரும் பிரகாஷைத் தாக்கினர். பின்னர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு சாலையோரத்துக்கு கொண்டு சென்றனர். இதைப்பார்த்து சங்கீதாவும் ரேவதியும் அதிர்ச்சி அடைந்தனர். பிரகாஷை விட்டுவிடுமாறு போலீஸாரிடம் கெஞ்சினர். ஆனால் போலீஸார் அதைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து போலீஸ்காரர், நடந்த நிகழ்வுகளை செல்போனில் படம் பிடித்தபடி இருந்தார்.
போலீஸாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற பிரகாஷை அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அப்போது அங்கு வந்த பெண் உதவி ஆய்வாளரிடம், தன் மகனை காப்பாற்றுமாறு கூறி சங்கீதா கதறியுள்ளார். ஆனால் மற்ற காவலர்களுடன் சேர்ந்துகொண்ட அவர், சங்கீதாவை அங்கிருந்து தரதரவென இழுத்துச் சென்றார். அந்த நேரத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் சங்கீதா மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் சாலையோரம் இருந்த இரும்பு கம்பத்தில் பிரகாஷை கட்டி வைத்து அவரது தாய் மற்றும் சகோதரி முன்பாக காவலர்கள் அடித்து உதைத்தனர். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாரே ஒரு குடும்பத்தினரை தாக்குவதைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாம்பலம் போலீஸார், பிரகாஷ், சங்கீதா, ரேவதி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், எஸ்ஐ சுரேஷ் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தல், வாக்கி டாக்கியை சேதப்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கேட்டபோது, “பிரகாஷ் ஹெல்மெட் அணியவில்லை. அதற்கு அபராதம் கட்டுமாறு சொன்னபோது, ஆவேசமாக சத்தமிட்டு எஸ்ஐ சுரேஷின் சட்டையை பிடித்து குத்தியுள்ளார். வாக்கி டாக்கியை சேதப்படுத்தியுள்ளார்” என்றனர்.
இந்நிலையில் போலீஸாரால் இளை ஞர் தாக்கப்பட்ட சம்பவம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago