போன் செய்தால் போதும்.. மரக்கன்று டோர் டெலிவரி: இளைஞர்களின் வித்தியாச முயற்சி

By அ.முன்னடியான்

போ

ன் செய்தால் போதும் உணவு வீட்டுக்கே வரும். உடல் பருமனை குறைக்கும் இயந்திரம் வரும், காய்கறி கட்டர் வரும், செல் போன் வரும், சிம்கார்டு வரும், ஏன் ஒரு போன் அழைப்பில் அரசியல் கட்சியில் உறுப்பினர் ஆனதற்கான அட்டை கூட வரும்.., ஆனால் மரக் கன்று வருமா?

புதுச்சேரியை சுற்றி இருப்பவர்கள், ‘94432 32268’ என்கிற இந்த எண்ணுக்கு அழைத்துப் பாருங் கள் வீட்டுக்கே மரக்கன்றும் வரும், அதை நட்டு வைக்க நபர்களும் வருவார்கள். உங்கள் வேலை எல்லாம் மரத்துக்கு தண் ணீர் ஊற்றி பராமரிப்பது மட்டும்தான். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மரம் நடுவது நமது அன்றாடக் கடமையாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பணியை வித்தியாசமாக செய்து வருகின்றனர் புதுச் சேரி பூரணாங்குப்பம் கிராமத்து இளைஞர்கள்.

மரங்களோட பயன்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், பசுமையான சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையின் விளைவுதான் இந்த ‘வீடு தேடிச் சென்று மரக்கன்றுகளை நடும் பணி’. இதுக்காக ஃபேஸ் புக், வாட்ஸ் அப்-ல் குழுக்களைத் தொடங்கியுள்ளனர்.

பூரணாங்குப்பம் ஆனந்தன், மனிஷ் மற்றும் அவர்களது தோழர்களிடம் இதைப் பற்றிக் கேட்டோம். “2011-ல் டிசம்பரில் வீசிய தானே புயல்ல புதுச்சேரில ஆயிரக்கணக்கான மரங்க அடி யோட சாஞ்சி போச்சு. அப்ப இருந்த பசுமை இப்ப இல்ல. பழைய மாதிரி பசுமையா மாத்த கடந்த 2012-ல் இருந்து சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட ஆரம்பிச்சோம்.

நட்டா போதுமா, அதை பராமரிக்கிறது முக்கியம்னு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சிது. 2015 முதல் ‘வீட்டுக்கொரு மரம்’ திட்டத்தை தொடங்கினோம். யாராச் சும் போன் போட்டு கூப்பிட்டா போதும், ஓடிப்போயி மரக்கன்றுகளை நட்டுட்டு வருவோம். இப்படி 165 வீடுகள்ல மரக்கன்றுகளை நட்டுருக்கோம்’’ என்கின்றனர் உற்சாகமுடன்.

மரக் கன்றுகளை நட்ட கை யோடு, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் சொல் லிக் கொடுக்கின்றனர். மரக்கன்றுகளை நட்டுவைத்த தேதி வாரி யாக விவரங்களை தொகுத்து அவ்வப்போது மரம் வளர்வதை கண்காணிக்கின்றனர். சொர்க்க மரம், தான்ரிகா, பின்னை, பாதாம், மகிழம், வேம்பு, காட்டு வேம்பு, கருமருது, சிவப்பு கொன்னை, மந்தாரை, அசோக மரம் என இவர்கள் நட்டுவைத்த மரங்கள் அனைத்தும் பாரம்பரிய வகையைச் சேர்ந்தவை.

இதற்காக மிகச்சிறிய நர்சரி கார்டன் ஒன்றும் இயங்குகிறது. தேவைப்பட்டால் வெளியில் விலைக்கு வாங்கியும் மரங்களை நடுகின்றனர். இதுபோக 16 ஆயி ரம் விதைப் பந்துகளை தயாரித்து புதுச்சேரி சுற்றுவட்டாரம், திண்டிவனம் வரையிலான சாலையோரங்களில் விதைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகளை விதைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இவைகளில் எத்தனை தப்பி முளைக்கிறோ அத்தனையும் இந்த இளைஞர்களின் பெயரைச் சொல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

2 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

25 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்