ப
டிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் கல்லூரியைவிட்டு போகாமல் அதே கல்லூரியிலேயே இருக்கிறார்கள் 35 பேர். முன்னாள் மாணவிகளாக வந்தவர்கள் இன்னாள் பேராசியைகளாக தொடர்வது தான் அதற்கு காரணம்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வசந்தகாலம் கல்லூரிக் காலங்கள்தான். படித்த கல்லூரியும் கல்லூரித் தோழர்களும் நம் நினைவு அடுக்குகளில் எப்போதும் தேங்கியிருப்பார்கள். அவை அவ்வப்போது வந்து போகும். அவ்வளவுதான். அத்தோடு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவோம். அதேநேரம் படித்த கல்லூரியிலேயே பணிக்குச் சேர்ந்து காலம் முச்சூடும் கல்லூரியிலேயே கழிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல 35 பேர் தாங்கள் படித்த கல்லூரியிலேயே பேராசியைகளாக பணி யில் இருக்கின்றனர். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில்தான் இந்த அதிசயம். தன்னாட்சிக் கல்லூரியான இது 1968-ல் தொடங்கப்பட்டது. இளநிலை தொடங்கி ஆராய்ச்சிப் படிப்பு வரை 14 துறைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு படிப்பது 2,200 மாணவிகள். பணியில் இருப்பது 150 பேராசிரியர்கள்.
கல்லூரியின் முதல்வர், இணை மற்றும் உதவி பேராசிரியைகளாக இருப்பவர்களில் 35 பேர் முன் னாள் மாணவிகள். மேலும் ஒரு நூலக ஆசிரியை, ஒரு ஊழியர், மனையியல் துறையின் கீழ் இயங் கும் மழலையர் பள்ளியில் ஒரு ஆசிரியையும் இங்கு படித்தவர்களே. அதனால் ஒரு குடும்பம் போலவே இருக்கிறார்கள்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வரும், முன்னாள் மாணவியுமான பூங்காவனம் நம்மிடம் கூறும்போது, “படித்த கல்லூரியிலேயே பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயம். அதுவும் ஒரே கல்லூரியில் படித்து ஒண்ணா 35 பேர் வேலை பார்க்கிறது பூரிப்பாக இருக்கிறது. பொதுவாகவே தெரிந்த ஒரு இடத்தில் பணியாற்றும்போது அந்த ‘ஒர்க்கிங் அட்மாஸ்மியர்’ நமக்கு சட்டுன்னு பிடிச்சிப் போகும். வேலை இலகுவா இருக்கும். அந்த உளவியல் காரணம்தான் நான் உள்பட 35 பேரையும் இந்தக் கல்லூரி ஒரே இடத்தில வேலை பார்க்க வச்சிருக்குன்னு நினைக்கிறேன்’’ என்று கூறினார்.
இதுதவிர கல்லூரியில் முன் னாள் மாணவிகள் சங்கமும் இயங்கி வருகிறது. "எங்கள் கல்லூரியில் எளிய குடும்பங்களில் இருந்து வரும், கிராமப்புற மாணவிகளும் படிக்கின்றனர். அவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை. எங்கள் சங்கம் மூலம் 150 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்குகிறோம்’’ என்கிறனர் இதன் நிர்வாகிகளான வாசுகி, ரஜினி சனோலின்.
உணர்வுமயமாய் பணியை தொடரும் இந்த 35 பேராசிரியை களைப் பொறுத்தவரை இந்த கல் லூரி அவர்களுக்கு ஒரு தாய்மடி.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago