பொ
ங்கலை முன்னிட்டு கால்நடைகள் எல்லாம் அழகழகான நெட்டி மாலைகளோடு வலம் வந்தன. இவ்வாறு கால்நடைகளை அலங்கரிப்பதற்காக கழுத்துக் கயிறுடன் கற்றாழை நாரினால் ஆன ஜல்லி எடுத்து, ஆறு- வாய்க்கால்களில் ஓடும் தண்ணீரில் வைத்து, ஓரிரு நாட்கள் ஊறிய பின் கல்லில் தேய்த்து நார் எடுத்து நறுக்கி, வர்ணம் தீட்டி அளவாய் அழகாய் தயாராகிறது ஜல்லி. அதிலும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திப்பிராஜபுரம் நெட்டி மாலைக்கு தனி மவுசு. இதனை ஊரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர். கே.ராஜமூர்த்தி கூறும்போது, “எங்களது மூதாதையர் காலந்தொட்டு இந்த மாலைகளை தயாரிக்கிறோம். தாழம்பூ நார், நெட்டியைத் தேடி அலைந்து திரிந்து கொண்டு வருவோம். மாலைகள் ஒரு ஜோடி விலை ரூ.10 முதல் ரூ.50 வரை. 3 மாதம் குடும்பமே இதற்காக உழைத்தன” என்கிறார்.
சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் நெட்டிகள் வளரவில்லை. தொழில் சுமாராகத்தான் நடக்கிறது. ஆனாலும், வண்ண மாலைகளுடன் மாடுகளைப் பார்க்கும்போது இந்தக் கவலை நீங்கிவிடுகிறது என்கின்றனர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago