ஒருவித பதற்றத்துடனேயே பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என்று பிடிபடாமல் குழம்பிப் போகி றார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காகவே தனது விடுமுறை நாட்களை ஒதுக்குகிறார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜே.கார்த்திகேயன்.
என்ன படிக்கலாம்
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவராக இருக்கிறார். ஆனால், சனி, ஞாயிறுகளில் இவர் ஏதாவது ஒரு அரசு பள்ளியில் தான் இருக்கிறார். அங்கே, கிடைக்கும் இடத்தை வகுப்பறையாக்கிக் கொள்கிறார். இந்த வகுப்பில் அமரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம், அடுத்து என்ன படிக்கலாம்.. பொறியியல், மருத்துவம் தவிர்த்து, வேறெந்தப் படிப் புகளுக்கெல்லாம் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பது குறித்த வழிகாட்டுதலுடன் பேசுகிறார் கார்த்திகேயன்.
இவர், பொறியியல் துறையிலும் சமூகப் பணிகளிலும் செம்மையாக பணியாற்றியமைக்காக இதுவரை தேசிய அளவில் 3 விருதுகளையும் மாநில அளவில் 9 விருதுகளையும் பெற்றவர். பீரங்கிகளை இயக்கும் மோட்டார்களை மின்னணு தொழில் நுட்பத்திலும் இயக்க முடியும் என ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய கார்த்திகேயன், பாதுகாப்பு அமைச்சகம் தந்த பொறுப்பை ஏற்று, அந்த மோட்டாரை தயாரித்துத் தந்து முனைவர் பட்டம் பெற்றார்.
தெளிவான புரிதல் இருக்காது
தேசிய அளவில் ‘இளம் பொறியாளர்’ விருது பெற்றுள்ள கார்த்திகேயன், என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பணியே தனக்கு மிகுந்த மன நிறைவைத் தருவதாகச் சொல்கிறார் .
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பதில் தெளிவான புரிதல் இருக்காது. போதாதுக்கு, அக்கம் பக்கத்தினரும் அவர்களைக் குழப்புவார்கள். மருத்துவம், பொறியியலைத் தாண்டி, கலை - அறிவியல், வேளாண்மை, தோட்டக்கலை, வனம் சார்ந்த படிப்புகள் என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்புகளை முடித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆனவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்களில் அரசுப் பள்ளி மாணவர்களும் இருக் கிறார்கள்.
விடுமுறை நாட்களில் எனக்குக் கிடைக்கும் நேரத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கி, இதை யெல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். படிப்பு மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானித்து விடாது. போதிய படிப்பறிவு இல்லா மலும் தங்களது தனித் திறமைகளால் சாதித்தவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இதையும் மாணவர்கள் மத்தியில் பேசி தன்னம்பிக்கை ஊட்டி வருகிறேன்.” என்று சொன்னார்.
ஊக்குவிக்க ஆளில்லாமல்..
இதுவரை, விருதுநகர், நெல்லை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 30 பள்ளிகளில் சுமார் ஆறாயிரம் அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்திருக்கும் கார்த்திகேயன், “கிராமப்புற மாணவர்களும் நிறைய இலக்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், தங்களை அதை நோக்கி நகர்த்துவதற்கான ஊக்குவிப்பும், வழிகாட்டுதலும் தர ஆளில்லாமல் தவிக்கிறார்கள். நமது கல்விமுறை மதிப் பெண்ணைத் துரத்தும் கல்வி முறையாக இருப்பதால், மாணவர்களுக்கு படி படி என நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை இழந்துவிடுகிறார்கள். சமீபத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
எனவே, எனது வழிகாட்டுதல் வகுப்புகளில், உயர் கல்விக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் வழிகாட்டு வதோடு நின்றுவிடாமல், தோல்விகளைக் கடந்து வெற்றி இலக்கைக் தொடுவதற்கான தன்னம் பிக்கையுடன் கூடிய பக்குவத்தையும் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறேன்” என்கிறார்.
தொடரட்டும் உங்கள் சேவை!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
முக்கிய செய்திகள்
மற்றவை
16 hours ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago