மத நல்லிணக்கம்
அ
க்.3 அன்று வெளியான, ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தான வித்வான்களாக முஸ்லிம் சகோதரர்கள்’ செய்தியைக் கண்டேன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் சகோதர்கள், கடந்த 21 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாகத் தங்களது கலைப்பணியை ஏழுமலையானுக்கு அர்ப்பணித்துவருகின்றனர் என்பது கலைஞர்களுக்கு சாதி, மதம் பேதமில்லை என்பதை நிரூபிக்கிறது. உண்மையில் கலைஞர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் சாதி மத பேதம் தேவையே இல்லை. மத அடிப்படையிலான வேற்றுமைகள் அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில் ஆறுதலைத் தந்த செய்தி இது!
-சாகுல்ஹமீது, காயல்பட்டினம்.
யார் பொறுப்பு?
மு
ம்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன. இந்த விபத்தே ஒட்டுமொத்த நிர்வாகக் குறைபாடை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அத்துடன், விபத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயன்றது கொடுமையிலும் கொடுமை. உதாரணமாக நடைபாதை மேம்பாலத்தில் நடந்த உயிரிழப்புக்குக் காரணம், மும்பை போலீஸா அல்லது ரயில்வே போலீஸா என்ற பட்டிமன்றம் தேவையற்றது. ஒவ்வொரு பகுதியிலுள்ள அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்படுவதுடன் அசம்பாவிதங்கள் நேராத வகையில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.
-எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
நவீன சுமைதாங்கிகள்
மு
தியோர் நலனில் அக்கறையுடன் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய நடுப்பக்க கட்டுரை (அக்.4) அருமை. மேலைநாட்டுக் கலாசாரத்தில் பதின் பருவம் வரை தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்கள் அதன் பின்னர் அந்தக் கடமையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தங்கள் நலனைப் பேணுகிறார்கள். ஆனால் நம் நாட்டில், குறிப்பாக நடுத்தர வர்க்க வீடுகளில், பிள்ளைகள் திருமணம் முடித்து இல்லற வாழ்விற்குத் தகுதியாகும் வரை பெற்றோர்களின் உதவியோடுதான் குடித்தனம் நடத்துகிறார்கள். அதன் பின்னரும் கூட அவர்களை நாம் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. முதியவர்களின் சேமிப்பை எல்லாம் கரைத்துவிட்டு, கடைசிக் காலத்தில் அவர்களைக் கண்ணியத்தோடு நடத்தாமல், விலக்கிவைக்கும் கொடுமைகளையும் காண்கிறோம். ஊதியமற்ற வீட்டுப் பணியாளர்களாக நடத்தப்படும் மூத்தோரின் நலன் குறித்து சமூக அக்கறையுடன் மத்திய, மாநில உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
-கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
ஊடகங்களின் பொறுப்பு
இ
ந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, ‘நான் நன்றாக விளையாடினால் அது செய்தி, அதுவே நான் மோசமாக விளையாடினால் அது மிகப் பெரிய செய்தி’ என்று கூறியிருக்கிறார். சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, ஊடகங்களில் சொல்லப்படாத சில தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், நிறைய அவதூறுகளும் அவற்றின் வழியே பரப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் இருப்போர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பிரதான ஊடகங்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது.
-அசோக் கருப்பசாமி, சங்கரன்கோவில்.
என்றும் வாழும் மகாத்மா!
அக்.2-ல் வெளியான ‘மூழ்குபவரைக் காப்பாற்றினாரா, அவரின் சட்டையைக் காப்பாற்றினாரா காந்தி?' கட்டுரையை வாசித்தேன். "ஒரு இந்துவாக இருந்துகொண்டு இந்துத்துவத்துக்கு எதிராக காந்தி நிகழ்த்திய போரில் உச்சபட்சமாக அவர் தனது உயிரையே இழந்தார். ஆனாலும், இன்றுவரை இந்துத்துவத்துக்குப் பெரும் எதிரியாக காந்தி நீடிக்கிறார் என்பதுதான் அவருடைய சிறப்பு!" எனும் வரிகள் சிலிர்க்க வைத்தன. அவை எவ்வளவு அழுத்தமான பொருள் பொதிந்தவை என்பதை இன்று இந்தியாவில் மத வெறியைப் பரவலாக்க முயல்பவர்கள் தொடர் தோல்விகளை சந்திப்பதில் இருந்து நாம் உணரலாம். மகாத்மா இன்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்.
-ஆர்.முருகேசன், அந்தியூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago