இப்படிக்கு இவர்கள்: தவறான பிரச்சாரத்தைத் தகர்த்த கட்டுரை

By செய்திப்பிரிவு

தவறான பிரச்சாரத்தைத் தகர்த்த கட்டுரை

தா

மஸ் ஃபிராங்கோ எழுதிய, ‘பணமதிப்பு நீக்கம்- தவறுக்கு யார் பொறுப்பு?’ கட்டுரை, பணமதிப்பு நீக்கம் வங்கிகளுக்குப் பெருத்த மூலதனத்தை அளித்துள்ளது என்ற தவறான பிரச்சாரத்தைத் தகர்த்துள்ளது. வட்டி இழப்பு, வாராக் கடன் அதிகரிப்பு, புதிய ஏடிஎம் இயந்திரங்கள் வாங்க கூடுதல் நிதிச் சுமை, தேவையற்ற உயிரிழப்பு, ஊழியர்களின் அல்லல் என்ற பல பரிணாமங்களையும் விளக்குகிறது. இச்சூழலில் இப்பெரும் பொறுப்பை வங்கிகள் தலையில் சுமத்தியுள்ளது மோடி அரசு. பணமதிப்பு நீக்கம் என்ற பெரும் சுமையை நடைமுறைப்படுத்தும் வாகனமாகச் செயல்பட்ட வங்கித் துறை சார்ந்தவர்களிடம் கட்டுரை பெற்றுப் பிரசுரித்தது சிறப்பு.

-என்.மணி, ஈரோடு.

ரகசியம் தேவையா?

மிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ரத்த வங்கி, உயர் படிப்பு பயின்ற மருத்துவர்கள் என்று மாவட்ட தலைமை அரசு மருத்துவனையில் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு டெங்கு இருப்பதைத் தெரியப்படுத்தவோ ஒப்புக்கொள்ளவோ மறுக்கிறார்கள். அதற்குப் பயந்தே மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள். அதேபோல மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் உள்ள வசதியும், மருத்துவர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ கிராமப்புற அரசு மருத்துவமனைகளிலோ இருப்பதில்லை. நோயை மறைக்கலாம், மரணத்தை மறைக்க முடியுமா?

-மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

பிரச்சாரம் தேவை

ப்பாவிகளையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் சுரண்டுகிற, அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் நேரச் செய்கிற நடவடிக்கைகளைத் தடுக்கிற வகையில் கர்நாடக அரசு நிறைவேற்றிய சட்டத்தை வரவேற்று எழுதப்பட்ட, ‘மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி’ (அக்.11) தலையங்கம் மிகச் சிறப்பு. மக்களுடைய வாழ்க்கையையும் சுகாதாரத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் எந்தச் சடங்காக இருந்தாலும் அதைச் சட்டமியற்றித் தடுப்பது எல்லா அரசுகளின் கடமை என்று வலியுறுத்தியிருப்பது மிகச் சரி. பகுத்தறிவு பூமியான தமிழகத்தில், மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களுக்கு முன்பே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இனியாவது சட்டம் கொண்டுவருவதுடன், மும்மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியம்.

-மருத்துவர் ஏ.சுப்பராயன், செஞ்சி.

இன்னும் வாழ்கிறார்

ர். விஜயசங்கர் எழுதிய ‘சே குவேரா: இறந்த அன்று பிறந்தவர்’ எனும் கட்டுரையை வாசித்தேன். உயிர் போகும் தறுவாயிலும் புரட்சித் துடிப்புடன் வாழ்ந்த சே குவேராவை அர்ஜெண்டினா, கியூபா மக்கள் மட்டுமல்ல உலகெங்கிலும் பல கோடி மக்கள் இழந்திருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோ உடன் இணைந்து இவர் செய்த புரட்சியின் விளைவே பல கோடி உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

-அ.அஸாருதீன், அடையாறு.

அலட்சியமும் விளைவும்

ணமதிப்பு நீக்கம் தற்கொலைக்குச் சமம் என முன்னாள் பா.ஜ.க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைத் தொடர்ந்து தற்போது அருண் ஷோரியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இவர்களெல்லாம் பாரபட்சமின்றித் தங்கள் கருத்துக்களை ஆதாபூர்வமாக எடுத்துரைப்பவர்கள் என்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள். ஆட்சியாளர்கள் மற்றவர்கள் எடுத்துரைக்கும் நல்ல கருத்துகளுக்குச் செவிமடுத்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கமும் அன்றாடங்காய்ச்சிகளும் படும் பாட்டை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தால் அதன் விளைவை விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும்!

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்