சலித்துக்கொள்வோருக்குத் தெளிவூட்டிய கட்டுரை!
க
லி.பூங்குன்றன் எழுதிய, ‘திராவிட இயக்கம் சாதித்தது என்ன?’ கட்டுரை (அக்.26) 50 ஆண்டு காலம் தொடர்ந்து திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் சலிப்பில் இருப்போருக்கு தெளிவைத் தருகிற கட்டுரையாக அமைந்திருக்கிறது. ஆண்டுவாரியாக, புள்ளிவிவரங்களுடன் கட்டுரை எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதேநேரத்தில், திராவிடக் கட்சிகளின் சில உத்தரவுகள் இப்போது அமல்படுத்தப்படவில்லை என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக அண்ணா பிறப்பித்த முக்கியமான ஆணைகளான, ‘தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை’ என்ற கொள்கை முடிவும், அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணையும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டேவிட்டன. சாமி படங்கள் இல்லாத அரசு அலுவலகங்களே அபூர்வமாகிவிட்டன.
-வீ.சின்னராஜ், ராமநாதபுரம்.
கேரளம் சொல்லும் பாடம்
“க
ந்துவட்டி ஒழிப்பு: கேரளாவை பின்பற்றுவதில் என்ன தயக்கம்-?” (அக்.26) கட்டுரை வாசித்தேன். சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பிப்பதுடன் அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. அரசாணை அமல்படுத்தப்படுவதையும் அதன் தொடர் நடவடிக்கைகளையும் முறையாக ஆய்வு செய்வதும் அரசின் கடமையே. எங்கேனும் சம்பவங்கள் நடைபெறும்போது மட்டுமே புள்ளிவிவரங்கள் தருவதும், சுற்றறிக்கை அனுப்புவதுமே தற்போது வழக்கமாக உள்ளது. கந்துவட்டிக் கும்பல் வலுவான அரசியல், சாதி பின்னணியுடனே இயங்குகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார்கள் உள்ளூர் காவல்துறையினரிடமே மீண்டும் வரும்போது, அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் கந்துவட்டிக்காரர்களால் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். இது போன்ற நிலையில்தான் தற்கொலைக்குத் துணிகிறார்கள். எனவே, கேரளத்தைப் போன்றே மாவட்டவாரியாகக் குழு அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவை.
-மு.செல்வராஜ், மதுரை.
நீதிமன்றம்தான் நம்பிக்கை
ரா
ஜஸ்தான் அரசு இயற்றியுள்ள சட்டத்தின்படி அரசு அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டுகள், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார் மீதான நடவடிக்கையை மாநில அரசு அனுமதி பெற்றுதான் தொடர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் அரசு இயற்றியதைப் போன்றே ஒரு அரசு ஆணையைக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தமிழக அரசும் வெளியிட்டது. அந்த அரசாணை அதே ஆண்டு ஜூலை 1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த இது போன்ற உத்தரவையும் 2014-ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், அதற்கு நீதிமன்றங்கள் தடையாக இருப்பது ஆறுதலான விஷயம்.
-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
இதுதான் அக்கறையா?
டெ
ங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆத்தூரில் பல வீடுகளுக்குள் சென்று ரூ.100, ரூ.500 ரூபாய் அபராதம் விதித்துக் கையோடு வசூலித்திருக்கிறார்கள் நகராட்சி அலுவலர்கள். டெங்கு ஒழிப்பில் அரசு மருத்துவமனைகளோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளும் அவர்களது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. தனியார் மருத்துவமனைகளின் சுத்தம் குறித்துப் பேசும் அரசு, தங்கள் பொறுப்பில் உள்ள அரசு மருத்துவமனைகளை எப்படிப் பராமரிக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. டெங்கு ஒழிப்புப் பணியில் அரசாங்கம் தீவிரமாகச் செயல்படுகிறது என்று காண்பித்துக்கொள்ள பொதுமக்களை வதைக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது.
-மருத்துவர் எம்.வித்யாசங்கரி, ஆத்தூர், சேலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago