எம்.எஸ்.சுப்புலட்சுமி : காற்றினில் வாழும் கீதம்
த
னது மதுரமான குரல் வளத்தால் உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கட்டிப்போட்ட ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மும்மூர்த்திகள், புரந்தரதாஸர், அன்னமாச்சார்யா, பாரதியார் மற்றும் தமிழ்ப் புலவர்கள் ஆகியோரின் அழியா வரிகளைத் தன் மதுரமான குரலோடு இணைத்து வெளிப்படுத்திய எம்.எஸ்ஸின் இசை கேட்பவர்களுக்குப் பேரானந்தக் கடலில் மூழ்கித் திளைக்கும் உணர்வைக் கொடுப்பவை. அவருடைய ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘குறையொன்றுமில்லை’, ‘மைத்ரீம் பஜத’ போன்றவை அமரத்துவம் பெற்ற பாடல்கள். பாடும்போது தான் பெற்ற உணர்வுகளையும் அனுபவங்களையும் கேட்கும் ரசிகர்களுக்கும் பரிமாற்றம் செய்து, அவர்களையும் இசையில் ஒன்றிணையச் செய்வது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தன்னிகரில்லா ஆற்றல். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டதுபோல, ‘எம்.எஸ். வளர்த்த இசை நம்முடைய ஆன்மா, உடல், ரத்தம் ஆகியவற்றோடு கலந்து, இந்த உலகில் நிரந்தரமாக வாழும்’. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சொன்னதுபோல ‘எம்.எஸ். அவர்களின் மூச்சு அடங்கினாலும் அவரது இசை என்றும்போலத் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருக்கும்’.
- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.
கல்வியே வளர்ச்சிக்கு அடிப்படை
‘வ.
ரங்காசாரி எழுதிய ஐரோப்பாவை வியக்க வைக்கும் ரொமானியாவின் பொருளாதார வளர்ச்சி’ (அக். 20) கட்டுரை வாசித்தேன். கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடான ரொமானியா, வேகமான பொருளாதார வளர்ச்சியடைந்ததற்குக் காரணம், கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையும், காட்டப்பட்ட அக்கறையுமே என்பது சிந்திக்க வைத்தது. அதேபோல, மக்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில், வரி விகிதம் குறைக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வளரும் நாடான இந்தியா பின்பற்ற வேண்டியது இதைத்தான். கல்வியையும் மருத்துவத்தை யும் இலவசமாக்கினால், நம் நாட்டின் வளர்ச்சி தானாகவே நிகழும். இவ்விரு விஷயங்களுக்காகத்தான் ஒவ்வொரு குடும்பமும் தன்னுடைய வருமானத்தின் பெரும் பங்கைச் செலவழிப்பது அரசுக்குத் தெரியாதா?
- எம்.சுதாகர், பரமக்குடி.
அரசுக்குப் பொறுப்பில்லையா?
டெ
ங்கு பீதியில் மக்கள் உறைந்திருக்கும் தறுவாயில், கொசு ஒழிப்பு மருந்திலும் கலப்படம் எனும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. (டெங்கு மரணங்கள்: இல்லாமல் போன முன்னெச்சரிக்கை!, அக்.20). டெங்கு பிரச்சினையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிற அரசு, சுகாதாரக்கேடு பரப்புவதாக மக்களுக்கு அபராதம் விதித்துவருவது வேதனையின் உச்சம். மக்களின் உயிரைக் குடித்த டெங்குவை கட்டுப்படுத்தத் தவறியது உண்மையில் அரசும் அதிகாரிகளும் அல்லவா?
- ம.காசிமுருகன், விழுப்புரம்.
நோய் பரப்பும் நெகிழி
‘கொ
சுக்களுடன் ஒரு பனிப் போர்' (அக்.18) கட்டுரை வாசித்தேன். ஆதிகாலம் தொட்டே கொசுக்கள் நம்முடன் இருந்துவந்திருக்கிறது. தனிமனிதச் செயல்பாடும் ஒட்டுமொத்த விழிப்புணர்வும்தான் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும். நெகிழி காகிதப் புரட்சி வந்த பின்பு கொசுக்களின் பெருக்கமும், நோய்களின் வகையும் அதிகரித்துவிட்டது. நெகிழி காகிதங்கள் பயன்படுத்தத் தடை செய்வதில் பெயரளவில்தான் சட்டம் உள்ளது. அதை நுகர்வோர் எண்ணிக்கை அதிகம். குப்பை மேடுகளில் கொசுக்கள் சுலபமாக உற்பத்தியாகிறது. டெங்குவுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரம் வேண்டும்தான். அதைவிட கட்டுப்படுத்துவதிலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் தேவை.
-எஸ்.மைக்கேல் ஜீவநேசன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago