ப
ணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவசரகதியில் கொண்டுவந்தது மத்திய அரசு. இதுகுறித்த மீள் பார்வையில், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிராங்கோ எழுதியிருக்கும் கட்டுரை (‘பணமதிப்பு நீக்கம்: தவறுக்கு யார் பொறுப்பு?’அக்.11) பல சந்தேகங்களுக்கு விடைகாண வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் மக்களை வந்தடையும் முன்பே, கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஜனார்த்தனன் ரெட்டி, சேகர் ரெட்டி போன்றவர்களுக்குக் கிடைத்தது எப்படி? பணக்கட்டுகளை விதிமுறைகளை மீறி மாற்றிக் கொடுத்த வங்கிகள் எவை? இதற்கெல்லாம் அரசு பதில் தரவில்லை என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கட்டுரையாளர் ஆதங்கப்படுவது போல் இதுதொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால், கறுப்புப் பணத்தை ஒழிப்போம் எனும் மத்திய அரசின் கோஷம் வெறும் கண்துடைப்புதான்!
-கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலாப்பூர்.
ப
ணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு குறித்து ‘பாதிக்கப்பட்டோர் குரல்’ என்ற தலைப்பில் சாதாரண மக்களின் கருத்துகள் தொடர்ந்து வெளிவருவது அருமை. அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவு எவ்வாறு மக்களைப் பாதிக்கிறது என்பதை நிபுணர்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பேட்டி கண்டு ஆதாரத்துடன் சுட்டிக்காட்டும் ‘தி இந்து’வின் பணி பாராட்டத்தக்கது.
-ஆர்.முருகேசன், அந்தியூர்.
முன்னுதாரணங்களை மறக்கலாமா?
த
மிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. இதைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறிக்கொண்டிருக்கின்ற வேளையில் 1940-களில் கோவை மாவட்டத்தில் பிளேக் நோயை முறியடிக்க எடுக்கப்பெற்ற நடவடிக்கைகள் நினைவிற்கு வருகின்றன. இன்றைக்கு உள்ள அளவில் மருத்துவர்களோ பிற வசதிகளோ இல்லாத காலம். எலிகள் மூலம் தொற்று பரவுகின்றது என்று எலி ஒழிப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. ஊரையே காலி பண்ணச் சொல்லிச் சுகாதார அதிகாரிகள் வற்புறுத்த மக்கள் எங்கு செல்வது என்று அறியாதிருந்தனர். தண்டோரா ஒன்றுதான் அன்றைக்கு மக்கள் தொடர்பு சாதனம். இம்முயற்சியில் இரு மருத்துவரது சேவை மறக்க இயலாது. மாவட்டச் சுகாதார அதிகாரி டாக்டர் ஒய்.பி.வாசுதேவனும், நகரச் சுகாதார அதிகாரி டாக்டர் கோபால்கிருஷ்ண நாயுடுவும் ஓய்வொழிச்சல் இல்லாது பாடுபட்டு நோயைக் கட்டுப்படுத்தினர். அது ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வு. இது போலவே விடுதலைக்குப் பின் அம்மை ஒழிப்பு, மலேரியா கட்டுப்படுத்தல், தட்டம்மை ஒழிப்பு போன்ற போர்களும் சிறப்பானவை. அவற்றிலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கள நிலவரம் காட்டுகிறது.
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
புரியாத பாடம்!
வா
சகர்களின் கருத்துக்களில் உதிக்கும் கருத்துச் சித்திரம் ‘தி இந்து’வின் தனித்துவம். அக்.10 அன்று வெளியான, கருத்துச் சித்திரம், ராகுல் காந்திக்கு வரலாறு - புவியியல் தெரிகிறதோ இல்லையோ மத்திய அரசுக்குச் சுத்தமாகப் பொருளாதாரம் புரியவில்லை என்பதை நகைச்சுவையுடன் எடுத்துச் சொன்னது. பொருளாதாரம் மட்டுமா அவர்களுக்குப் புரியவில்லை? நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிற விவசாயிகளின் பிரச்சினைகளும்கூட புரிந்ததாகத் தெரியவில்லையே?
-இரா.தீத்தாரப்பன், மேலகரம், தென்காசி.
நல்ல பரிந்துரை!
‘ப
னாரஸ் இந்து பல்கலைக் கழகம்’, ‘அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்’ ஆகியவற்றில் உள்ள ‘இந்து’, ‘முஸ்லிம்’ போன்ற மதப் பெயர்களை நீக்க வேண்டும் என, பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு உண்மையான அடிப்படை மதச்சார்பின்மைதான் என்றால், அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதேபோல், பல கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி, மத ஒட்டுக்களையும் நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால், ஒரு மாபெரும் மாற்றத்திற்கு முதல்படியாக அமையும்.
-இளங்கோ கண்ணன், பட்டதாரி ஆசிரியர், சங்கரன்கோவில்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago