தடுத்தது போதும்!
எ
ன்.சுவாமிநாதன் எழுதிய, ‘தலித் அர்ச்சகர் நியமனம்: கடவுளின் தேசம் காட்டும் வெளிச்சப் பாதை!’ கட்டுரை வாசித்தேன். தமிழில் வெளியான, தலித் அர்ச்சகர் யது கிருஷ்ணாவின் முதல் விரிவான பேட்டி இதுவென்று கருதுகிறேன். கேரளாவில் இந்த விஷயத்தைச் சாத்தியமாக்கிய கம்யூனிஸ்ட் அரசின் செயலுக்குப் பாராட்டுகள். அந்த இளைஞரின் ஆர்வம், பிராமணர் ஒருவர் மற்ற சமூகத்தினருக்கும் ஆகமப் பயிற்சி அளித்தது போன்றவையும் இது சாத்தியமாவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. தமிழகத்தில் திமுகவும் திராவிடர் கழகமும் நீண்டகாலமாக எடுத்துவந்த இதுபோன்ற முயற்சிகள் இனியாவது வெற்றியடைய வேண்டும். தடுத்துக்கொண்டிருப்பவர்கள், தாங்கள் செய்தது எவ்வளவு அறியாமை என்பதை இனியேனும் புரிந்துகொள்ள வேண்டும்.
- அருணாச்சலம், திருவாடானை.
‘க
டவுளின் தேசம் காட்டும் வெளிச்சப் பாதை’ என்ற தலைப்பே அருமை. கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, பிரம்ம ஸ்ரீ அனிருத்தன் தந்திரி, யது கிருஷ்ணா என்று இவ்விஷயத்தில் முனைப்புக் காட்டி முயன்று முடித்துவைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அக்காலத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்திய ஈ.வெ.ரா. பெரியாரையும் இங்கு நினைவுகூர்வது அவசியம். அதுபோல சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்தால் ‘இறைவன் முன் அனைவரும் சமம்’ எனும் கூற்றும் மெய்ப்படும். அப்போது இந்த மகர ஜோதியின் ஒளிக்கீற்றுகள் எல்லை தாண்டியும் விரிவடையும்.
- இரா.தீத்தாரப்பன், மேலகரம்.
ஆம்னி கட்டணமும் அரசும்!
அ
க்டோபர் 16-ம் தேதி வெளியான, ‘அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்’ என்ற செய்தி பார்த்தேன். தேவையே விலையை நிர்ணயிக்கிறபோது, இதனை எப்படித் தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை? நீண்டகாலமாகத் தொடரும் இந்த முறைகேடு, சென்னையில் ஆம்னி பேருந்து நிலையம் ஒதுக்கிய பிறகு, அரசே மறைமுகமாக அதை அங்கீகரித்ததுபோல் ஆகிவிட்டது. இப்போது இணையத்தில், இருக்கை எண் போட்டு விற்கும்போது, அது இன்னும் தெளிவாக அங்கீகரிக்கப்படுகிறது. எனவே, அதனை முறைப்படுத்தி, எவ்வளவு கட்டணம் என்பதை அரசே அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்.
- ராமநாதன் முத்தையா, சென்னை.
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
‘தி
இந்து’ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் வெளியீடு குறித்த முன்னறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. திராவிட இயக்கத்தின் முக்கிய தருணங்களை முன்னெடுத்துச் செல்கிற ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள். இன்றைய கால கட்டத்தில், இந்தியா முழுமைக்கும் தேவையான மாநில மொழி, சுயாட்சி உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற லட்சியங்களை நோக்கி முன்நகர இந்நூல் வழிகாட்டும். குறிப்பாக, தேசம் எங்குமுள்ள இளைய தலைமுறையினர் இதனை அறிந்துகொண்டு, விவாதித்து, தேசநலனுக்காக வருங்காலத்தில் ஆற்றவேண்டிய கடமைகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. புத்தகத்தைப் படித்துப் பயனுற பெரிதும் ஆவலாய் உள்ளோம்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
காலத்தின் வாசனை
த
ஞ்சாவூர் கவிராயர் எழுதிய, ரங்கநாதன் தெருவில் ஒரு மாமரம் இருந்தது என்ற ‘காலத்தின் வாசனை’ கட்டுரை மிக அருமை. ரசனையான நடையில், வாழ்க்கைச் செய்தியைத் தருவதாகவும் இருந்தது. தெருவில் கிடந்த காகிதங்களைச் சேகரித்து வைத்து, அது என்னோட வீட்டு டாக்குமெண்ட் என்று கூறிய ரெங்காவின் மனநலம், தனது கல்விச் சான்றுகளைத் தவறவிட்டு, இங்கே சென்றால் கிடைக்கும் என்று அறிந்து அதைப் பெற்றுக்கொண்டவரின் மனநலம், அதற்கு நன்றிக்கடனாக ரூபாய் 100 வழங்கியதும், ரெங்கா வாங்க மறுத்ததும்... இவ்வளவு செய்திகளையும் நினைவில் கொண்டு தொகுத்து எழுதிவருகிற கவிராயரின் எழுத்துகள் அனைத்துமே அருமை.
- சா.சண்முகராஜா, மேலப்பாதி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago