வலிக்கும் உண்மை!
நான் நடுநிலை வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரத்தில், அரசு சார்பில் ஒரு சிறிய நூலகம் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கெனத் தனிப்பட்ட பணியாளர் நியமிக்கப்படவில்லை. ஒரு சகோதரி பராமரித்து வந்தார். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே ஆர்வத்துடன் படித்துவந்தனர். நானும் தினசரி பள்ளி முடிந்து மாலை நேரத்தை நூலகத்தில் செலவிடுவேன். நாளாக நாளாக செய்தித்தாள் விநியோகம் நின்றது. புதிய புத்தகங்கள் எதுவும் வரவில்லை. நூலகமும் சரியாகத் திறக்கப்படவில்லை.வாரத்துக்கு ஒரு முறை திறந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. எனக்கு அந்த சகோதரியிடம் ஓரளவு பழக்கம் ஏற்பட்டிருந்ததால் அவரின் வீட்டுக்குச் சென்று நூலக அறையின் சாவியைப் பெற்று வந்து, படித்துவிட்டுத் திரும்ப சாவியை ஒப்படைத்துவிட்டு வருவேன். படித்த புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பேன். இப்படியே சிறிது காலம் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு, வழக்கம்போல நூலகத்தின் சாவியைப் பெற்றுவர நான் அந்த சகோதரியின் வீட்டுக்குச் சென்றேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. ‘இப்போது நூலகத்தில் உர மூட்டைகள் போட்டு வைத்திருக்கிறார்கள். திறக்க முடியாது’ என்று கூறிவிட்டார். ஆம்! ஒரு நூலகம் உரக் கிடங்கானது. ‘நூலகங்கள் தட்டுமுட்டுச் சாமான்களைப் போடும் இடம் அல்ல’ தலையங்கம் படித்தவுடன் இந்நிகழ்வு எனக்குத் தோன்றியது.
- மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.
சிந்திக்க வைக்கும் படக் கதை
சி
றார்களின் சிந்தனை, கற்பனையைத் தூண்டுவதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டியாக இருந்தது, ‘காமிக்ஸ் இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுப்போம்’ (ஆக.26) தலையங்கம். சித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்களை 5-ம் வகுப்பு வரை தொடர்வதன் மூலம் கற்பதை எளிமையாக்குவதுடன், பாட எல்லையைக் கடந்த சிந்தனைக்கும் உதவும். ‘எருதுகள் நான்கும் சிங்கமும்’ எனும் படக் கதை ‘ஒற்றுமை என்றும் பலமாம்’ என்ற செய்தியை மனதில் பதிய வைப்பதைப் போல, பள்ளிப்பாட வரவுகளுக்குத் தலையங்கம் ஆலோசனை வழங்கியிருப்பது நல்ல யோசனை. செயல்படுத்தும் இடத்தில் இருப்போர் மனது வைத்தால், மார்க்கம் பிறக்கும்.
-சி.செல்வராஜ், புலிவலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago