இப்படிக்கு இவர்கள்: பெரியாரும் கம்யூனிஸமும்

By செய்திப்பிரிவு

பெரியாரும் கம்யூனிஸமும்

செ

ப்.20-ல் வெளியான, ‘பெரியாரும் சோஷலிஸப் பயணமும்’ என்ற கட்டுரையைப் படித்தேன். கட்டுரையின் இறுதியில் "பெரியாரின் இயக்கம் பொதுவுடமைத் தத்துவத்தோடு நீடித்த உறவைக் கொண்டிருந்தால், நவீனத் தமிழகம் எப்படி உருவாகியிருக்கும் என்ற விடை தெரியாத கேள்வி ஒன்று நெஞ்சில் எழுகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது. பெரியார் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிராக இறுதிவரை எந்தக் கருத்தையும் வெளியிடாதவர். பொதுவுடைமைத் தத்துவம் தவறானது என்று அவர் என்றுமே சொன்னதில்லை. அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மீது அவருக்குக் கடுமையான கோபம் இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. பெரியார் பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வளர வேண்டும் என்று கருதியவர். அதனால்தான் "இந்தியாவில் கம்யூனிஸம் பரவாதபடி இந்திய கம்யூனிஸ்டுகள் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்" என்ற கடுமையான கருத்தை வெளியிட்டார். அதனால் பெரியார் பொதுவுடைமைத் தத்துவத்தோடு முரண்பட்டவர் அல்ல, அக்கறை உள்ளவர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

-பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

அரசு அலுவலங்களில் அடையாள அட்டை

செ

ப் 21-ல் வெளியான ‘அரசு அலுவலகங்களின் அடையாளங்கள்’ கட்டுரையைப் படித்தேன். அரசு அலுவலகங்கள் சாமானிய மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திசெய்து தீர்வு காணும் இடங்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் நம்புகிறார்கள். எல்லா இடங்களிலும் நிலைமை மோசமில்லை என்றாலும், சில அலுவலகங்களுக்குள் நுழைய முடியாதபடி அரணாக கடை நிலை ஊழியர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இடைத்தரகர்கள், லஞ்சம் போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதும் முகம் சுளிக்கவைக்கிறது. அடையாள அட்டை இந்தப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வைத் தரும் என்று நம்பலாம்.

-கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி

வரவேற்கத்தக்க தீர்ப்பு

கு

ண்டர் தடுப்புச் சட்டத்தை மக்களை அடக்கிவைக்கும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்ற தலையங்கம் (செப்.21) பார்த்தேன். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து சாத்வீகப் போராட்டங்களை நடத்தி இறுதியாக வெற்றியும் பெற்று ஜனநாயக நாடாக ஆகியிருக்கிறது இந்தியா. மக்களாட்சி நடைபெறும் நாட்டில், ஆங்காங்கே குண்டர்கள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. திருமுருகன் காந்தி, வளர்மதி ஆகியோரின்மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது தேவையற்ற நடவடிக்கை. தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியது.

-எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

வாழ்க பல்லாண்டு!

‘யா

தும் தமிழே' என ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‘தி இந்து'வின் இதழில் எழுத்துரு, கருத்துரு என யாதும் தமிழே. தினந்தோறும் வரும் இணைப்பிதழ்களிலும் யாவும் தமிழே. உலகம் இவள் வசப்பட ‘பெண் இன்று' எனவும், அறிவே செல்வமென ‘வணிக வீதி'யில் உலா வர, இனியதொரு பயணமாக ‘வாகன உலகத்தில்', அறிவு உயர்வு தரும் படியாக ‘வெற்றிக் கொடி' ஏந்தி, குழந்தைகளின் குதூகல உலகமான ‘மாயா பஜாரி'ல் நுழைந்து, உள்ளத்தின் உண்மை ஒளியை ஏற்றி ‘ஆனந்த ஜோதியில்' திளைத்து, இனியதோர் உலகம் செய்ய ‘இளமை புதுமை'யாகவும், கனவு மெய்ப்பட வேண்டும் என ‘சொந்த வீட்டில்' குடியிருந்து உடலே கோயில் என ‘நலம் வாழ'வும், உழவே தலையென ‘நிலமும் வளமும்' பெற்று சிறந்திட பசுமையின் சுவாசத்தில் ‘உயிர் மூச்சு' நிலைத்திட வாழ்க வளர்க ‘தி இந்து' பல்லாண்டு.

-சு. தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர், கோவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்