இப்படிக்கு இவர்கள்: கடைத்தேறுவது எப்படி?

By செய்திப்பிரிவு

கடைத்தேறுவது எப்படி?

ரக வளர்ச்சித் துறையின் உண்மை நிலை குறித்த கட்டுரை படித்தேன். பண்ணைக் குட்டை வெட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துவிட்டு அதில் உள்ள சிக்கலைப் பரிசீலிக்க நிர்வாகம் மறுக்கிறது. எனவேதான் விவசாய நிலப்பரப்பையும் இழந்து தவிக்கின்றனர் விவசாயிகள். பண்ணைக் குட்டைகளைப் பயன்படுத்தி மீன்குஞ்சுகளை வளர்க்கவும் தோட்டப் பயிர்களை வளர்க்கவும் முறையே மீன்வளத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைத்துக் கட்டமைப்பு மற்றும் இடுபொருட்களுக்குரிய ஏற்பாடுகள் குறித்து சிந்திப்பதற்கே அரசு தயாராக இல்லை. குடிநீருக்கே சங்கடமான வறட்சிக்காலத்தில், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு சாத்தியமற்ற குறியீடுகளை நிர்ணயம் செய்துவிட்டு முடிக்க வேண்டும் என்று தொல்லை செய்வது, வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைத்துவிட்டு அதற்குச் சொற்ப நிதியை ஒதுக்குவது, திடக்கழிவு மேலாண்மை எனும் சவால் மிக்க திட்டத்தில் தூய்மைக் காவலர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்காதிருப்பது, வெறும் ரூ.12 ஆயிரத்தில் கழிப்பறை கட்டிக்கொள்ள முடியாத சூழல் என்று நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கும் பொருட்டு வினியோகிக்கப்படும் குளோரின் மாத்திரைகள் வாங்குவதில் கூட ஊழல் என்றால், கடையனும் கடைத்தேறுவது எப்படி?

-பெரணமல்லூர் சேகரன், ஊரகவளர்ச்சித் துறை உதவி இயக்குநர்(ஓய்வு).

வைகோ இந்தியப் பிரஜைதானே?

ழத் தமிழர்களுக்கு தனி நாடு வழங்குவது பற்றி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலில் குரல் தந்தவர் வைகோ. ஈழத் தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள், இலங்கை அரசின் படுகொலைகளைத் தற்போது ஐநா வாயிலாக உலகறியச் செய்துள்ளார் வைகோ. அவரைத் தாக்க சிங்களர்கள் முயன்றிருப்பதைத் தமிழகத் தலைவர்கள் சிலர் மட்டுமே கண்டித்துள்ளனர். இந்திய அரசு வாய்மூடி இருப்பது ஏன்? வைகோ இந்தியப் பிரஜை இல்லையா? அவருக்காகக் குரல் தராதது தவறான போக்கு.

-பொன்விழி, அன்னூர்.

தமிழ் அடையாள அரசியல்

செ

ப்.25ல் நடுப்பக்கத்தில் வெளிவந்த ‘சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா?’ என்ற கட்டுரை சிறப்பு. போலி தமிழ்த் தேசியவாதிகளும், சாதிக்கொடுமையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தமிழர்களும் இந்தக் கேள்வியை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு அறைகூவல் விடுக்கிறார் திருமாவளவன். 'சாதி ஒழிக, தமிழ் வாழ்க!' எனும் அறைகூவலே அது. இந்த அறைகூவலுக்குத் தமிழ் அரசியல் பேசுவோர் குறிப்பாக தலித் அல்லாதோர் கூறக் கூடிய பதில் என்ன என்பது நிச்சயம் அனைவரையும் யோசிக்க வைக்கும்.

-து.சீனிவாசன், திருவள்ளூர்.

காலத்தின் பதிவு

ஞ்சாவூர்க் கவிராயரின் காலத்தின் வாசனையாக வெளியாகியுள்ள ‘கூஜாவின் கோபம்’ (செப்.24) மிகவும் நேர்த்தியான முறையில் இருந்தது. அவரது ஒவ்வொரு படைப்பும் மிகவும் சுவைத்து நுகரக்கூடிய அளவிற்குச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கூஜாவை நம் கண்முன்னே சித்திரமாகப் படைத்துள்ளார். கூஜாவின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தால் இளைய தலைமுறையினர் அதனை அறிந்துகொள்ள வாய்ப்பிருந்திருக்கும்.

-கரந்தை சீனிவாசன், மின்னஞ்சல் வழியாக.

குறிப்பு தந்த வரலாறு

செ

ப்.25-ல் 'இணைய களம்' பகுதியில், கண்ணன் எழுதிய 'நாகர்கோவிலில் காந்தி!' என்பதைப் படித்தேன். தன் தந்தை சுந்தர ராமசாமியின் நைந்த குறிப்புகளின் வழி காந்திஜியின் விஜயம் பற்றி விளக்கியுள்ளார். “வாழ்ந்து முடிந்தவர்களுடைய வாழ்க்கை, வாழ நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்ற காந்தியின் கூற்றை நினைவூட்டும் வகையில் அவர் தம் எழுத்து அமைந்தது. நாமும் நம் வாழ்வில் நடைபெறும் முக்கியச் சம்பவங்களைப் பற்றிசிறு குறிப்பாகவாவது விட்டுச் செல்ல வேண்டும் என்றும் தோன்றுகிறது.

-ஷாஜஹான், திருவிதாங்கோடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்