இப்படிக்கு இவர்கள்: ஒருமைப்பாட்டைக் காப்போம்!

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற சட்டம் வரப்போகிற செய்தியைப் படித்து அதிர்ந்தேன் (டிச. 23). இதுபோல் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை என்று சட்டம் கொண்டு வந்தால், நிலைமை என்னாகும்? எவரும் சொந்த மாநிலத்தைத் தவிர, வேறு மாநிலத்திலும் வேலை பார்க்க முடியாது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது தேசத்தின் கொள்கைக்கு விரோதம் அல்லவா? தேசப் பிரிவினைக்கு வித்திடும் காரியம் அல்லவா? அதனால், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கர்நாடகம் கொண்டுவரப்போகும் புதிய சட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

- ஆர்.வடமலைராஜ், சென்னை.



தாமிரபரணிப் படைப்பாளர்

சிறுகதை, கவிதை, கடித இலக்கியம், உரைநடை, கோட்டோவியம் எனப் பலதளங்களில் 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தமிழின் மூத்த படைப்பாளரான வண்ணதாசனுக்குத் தாமதமாகவே, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தீபம் நா.பார்த்தசாரதியால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட வண்ணதாசனின் கதைகள் அழகியல் பதிவுகள். தாமிரபரணி நதி சார்ந்து வாழும் மிக எளிய மனிதர்களின் வாழ்வைக் கொண்டாடிய யதார்த்தப் படைப்பாளி அவர். தி.ஜானகிராமனுக்குப் பிறகு, பெண்களின் மனஉணர்வுகளை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. அடுத்து ஞானபீடப் பரிசை அவர் தமிழுக்குப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. வண்ணதாசனின் அரை நூற்றாண்டு ஆத்ம நண்பர் வண்ண நிலவன் கட்டுரையை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ள ‘தி இந்து’வுக்கு நன்றி.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



தமிழகத்தின் ஏக்கம்

டிச.22ல் வெளியான, ‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின் றன?’ கட்டுரை காலத்துக்கேற்ற சாட்டை. எதிர்க்கட்சிகளையும், ஏன் ஆளும்கட்சியையும்கூட சூடாகவே கேட்கிறார் கட்டுரையாளர். இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொதுவாழ்வில் இருப்பதாகச் சொல்பவர்கள் அனைவருக்குமான சவால். ஊடகங்களின் விமர்சனங் களால் அரசியலை புரட்டிப்போட்ட தருணங்களும் உண்டு. இப்போதும் அது நடக்காதா என்று தமிழகம் ஏங்குகிறது!

- மு.மணிவேல், திருப்பாலை.



மாறுவதெப்போது?

டிச.23ம் தேதி வெளியான, ‘தலைமைச் செயலாளருடன் சந்திப்பு!’ எனும் டி.எல்.சஞ்சீவிகுமாரின் கட்டுரையைப் படித்து வியந்தேன். எளிமையாக இருப்பது, மக்களும், ஊடகவியலாளர்களும் எளிதில் அணுகுபவர்களாக இருப்பது, மாநில உரிமைப் பிரச்சினைகளில் ஒற்றுமையாகச் செயல்படுவது போன்றவை கேரள அரசியல்வாதி களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. அரசியல்வாதிகள் எளிமையாக இருப்பதால், அதிகாரிகளும் அவ்வழியே செயல்படுகின்றனர். தமிழகத்தில் எல்லாமே தலைகீழ். ஆள்பவர்களையும் அணுக முடிவதில்லை. அதிகாரிகளையும் அணுக முடிவதில்லை. இந்நிலை என்று மாறுமோ?

- தரணிதரன், மின்னஞ்சல் வழியாக.



தொடரும் வெற்றி

இன்றைய அரசியல் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகிற, ‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?’ கட்டுரை (டிச.22) மிக அற்புதம். தமிழக அரசியலில் இரண்டு பிரம்மாண்ட கவர்ச்சிப் பிம்பங்களின் சகாப்தங்கள் முடிந்துவிட்ட நிலையில், தொடர் வெற்றியினை நோக்கித் தந்திரமாக நகர்ந்து செல்லும் அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்க வாய் திறக்க மறுக்கும் எதிர்க்கட்சிகளுக்குச் சரியான சவுக்கடி.

- ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்