மறைந்த சோவைப் பற்றி நவ.7, 8-ம் தேதியன்று அரவிந்தன், மணா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் வழியாகப் படித்துத் தெரிந்துகொண்டேன். நடிகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், அரசியல் விமர்சகர் என்று அறிந்திருந்தபோதிலும் அவரின் எழுத்துக்களை அவ்வளவாகப் படித்ததில்லை. அவரின் எழுத்து நடை, அங்கத உணர்ச்சி போன்ற செய்திகள் சுவாரசியம் மிகுந்த தாக இருந்தது. மேலும், என் பிள்ளைகளிடமும், அவர் யார்.. அவருடைய சிறப்பு என்ன.. அவரு டைய பணி போன்றவற்றைப் பற்றி சிறுகுறிப்பாகப் பகிர்ந்துகொள்ள மிகவும் பயனுடையதாக இருந்தது. கருத்துப் பேழை, எம் போன்றோர்க்கு அறிவுப் பேழையாகவும் சிந்தனைப் பேழையாகவும் திகழ்கிறது. வாழ்த்துகள்!
- பூவை ராஜா, மின்னஞ்சல் வழியாக.
அரசியலில் ஆரம்ப நிலையில் களப் பணி ஆற்றுபவர்கள், விவாதக் கூட்டங்களுக்குச் செல்லும் முன் துக்ளக்கை நன்றாகப் படித்து விட்டுச் செல்வார்கள். நடப்பு அரசியலை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைகள், ஆசிரியர் உரை அதில் இருக்கும். துக்ளக்கைத் தவிர்த்து விட்டு, மத்திய - மாநில அரசியலைப் பேசிவிட முடியாது என்ற அளவுக்குக் கருத்தாழம் நிறைந்த இதழாக துக்ளக் இருந்ததற்கு சோ எனும் ஆளுமையே காரணம். அவரது மரணம் இதழியல் துறைக்குப் பேரிழப்பு.
- எஸ்.மைக்கேல் ஜீவநேசன், மின்னஞ்சல் வழியாக.
ஒரு ‘புள்ளி’ விவரம்
குழந்தைகளுக்கான சித்திரக் கதைத் தொடரை அறிமுகப்படுத் திய சிறார் எழுத்தாளர் ஆர்.வேங்கடராமன் (தி இந்து - 6.12.16) தம் புனைபெயரின் நடுவே புள்ளி இல்லாமல் ‘ஆர்வி’ என்றே எழுதுவார்.
- எம்.எஸ்.., நாகர்கோவில்.
பாரதியும் பெரியாரும்
‘எல்லா பெண் தலைவர்களையும் விட பெண் கல்வி, பெண் உரிமை, பெண் விடுதலைக்காக ஓயாமல் உழைத்தவர்கள், குரல் கொடுத் தவர்கள் பாரதியும் பெரியாரும்தான் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்’ என்பதே ‘தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ கட்டுரையின் கருத்தாக நான் கருதுகிறேன். ‘மக்களின் அறியாமையும், அலட்சியமும் இன்னும் எத்தனை காலந்தான் நம்மைச் சீரழிக்கப் போகிறதோ என்ற கேள்வியையும், நம் அடிப்படை அரசியலைப் பற்றிய தெளிவும் பார்வையும் நமக்கெல்லாம் உண்டா?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது இக்கட்டுரை.
- அ.மயில்சாமி, கண்ணம்பாளையம்.
நீராதாரங்களைக் காப்போம்!
கா.சு.வேலாயுதம் எழுதிய ‘நொய்யல்: இன்று எப்படி இருக்கிறது?’ கட்டுரையை இணையதளத்தில் வாசித்தேன். முன்பு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்கள் தொழிற்சாலை வளர்ச்சியில் பின்தங்கியிருந்தபோது, நொய்யல் ஆற்றின் மூலம் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற்றன. ஆனால், தற்போது நொய்யல் ஆற்று நீரைக் குடிக்க அல்ல, விவசாயத்துக்குக்கூடப் பயன்படுத்த முடியாது. ஒருபக்கம் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நாம், இயற்கை நீராதாரங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.
முயற்சிக்குத் துணை நிற்போம்!
நூலகமில்லா வீடு சாளரமில்லா வீடு. புத்தகமே விரிந்த உலக வெளிக்கு நம்மைக் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறது. இணையத்திலும் படிக்கலாம்தான்; முதுகும் கண்ணும் அதை மூடி வைக்கச் சொல்லும். புத்தகங்கள் நம் கையில், கைப்பையில், படுக்கையில், பயணத்தில் உடனிருந்து நம் உடலின் அங்கமாகத் திகழும். அப்பேற்பட்ட புத்தகங்கள் கொள்வாரின்றி இருப்பது கொடுமை. ஆடையை, ஆபரணத்தை, காலணியை விற்பவர்கள் உயர்வடையும்போது, அழிவில்லாத அறிவை விற்பவர்கள் அயர்வடையக் கூடாது.
மாதம் ஒரு புத்தகம், பயணத்தின் போது ஒரு புத்தகம், பரிசளிக்க ஒரு புத்தகம் என்று வாங்கலாம். முக்கியப் பிரமுகர்கள் ‘சால்வைக்குப் பதில் புத்தகம் தருக’ எனச் சொல்லிப் பெறலாம். ஹைதராபாத்தில் புத்தகங்கள் கிலோ ரூ 200, 250 என்று விற்கிறார்கள். இங்கும் அப்படி விற்கலாம். புத்தக விற்பனையாளர்களின் கவலை (டிச 11) கண்ணீரை வரவழைத்தது. புத்தகங்கள் வாங்கச் சொல்லி ‘தி இந்து’ முன்னெடுக்கும் முயற்சிக்குத் துணை நிற்போம்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago