முள்மரம் கொல்க

By செய்திப்பிரிவு

ஜூலை 10 இதழில் மொழி அறிஞர் இ. அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ் நாட்டின் மொழிக் கல்வி, தாய்மொழிக் கல்விகுறித்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை மீண்டும் அரங்குக்குக் கொண்டுவந்துள்ளன.

மொழிப் பிரச்சினையில் குற்றம் இழைத்தவர் யார் என்ற விவாதங்கள் இனி தேவையில்லை. மாறாக, பெற்றோரும் கல்வி கற்போரும் தெளிவுபெறும் வகையில் அரசு அசல் கல்வியாளர்களைக் கொண்ட நம்பகமான ஆலோசனைக் குழுவை உருவாக்கி, அந்த அறிஞர் குழுப் பரிந்துரைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் சாராத கல்வியாளர்களைத் தமிழக அரசு ஆலோசனைக் குழுவில் இடம்பெறச் செய்வதோடு அவர்களைப் போன்றவர்களை மொழிக்கல்வி பற்றிய நிரந்தர மதியுரைஞர்களாக அமைத்துக்கொள்வதுகூட வருங்காலத் தமிழகக் கல்விக் கொள்கை வகுப்பதில் ஈடுபடுத்தலாம்.

இன்று நாம் தவறு செய்தால் காலம் நம்மை மன்னிக்காது. தமிழ் கற்காத தலைமுறைகளை உருவாக்கிவிட்டு, இங்கு தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழ்ப் பல்கலைக்கழகமும், உலகத் தமிழ்க் கழகமும் இருந்தால் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன? இளம் மனங்களில் வாழாத தமிழ், தமிழ்நாட்டில் வாழப்போவதாக நினைப்பது வீண் கனவு.

இதே இதழில் வெண்ணிலா, அரசுப் பள்ளியில் மகளைச் சேர்ப்பதற்கு எடுத்த முயற்சிக்கு மகளே முதலில் எதிர்ப்புத் தெரிவித்ததைக் கூறியிருக்கிறார். இதுதான் நாட்டு நிலை. மகள் மனதை மாற்றிய வெண்ணிலாவின் உதாரணம், பெற்றோர்களுக்குப் பெரிய முன்மாதிரி அல்லவா?

எனவே, 'இளைதாக முள் மரம் கொல்ல' அரசு முன்முயற்சி எடுக்குமா?

- சிற்பி பாலசுப்பிரமணியம், பொள்ளாச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்