இப்படிக்கு இவர்கள்: தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘தமிழ்ப் பேராய விருதுகள்’!

By செய்திப்பிரிவு

சனிக்கிழமை (19.11.16) தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ் எழுத்தாளருக்கான விருதுத் தொகை கௌரவமா? அகௌரவமா? என்ற வரிகள் குறிப்பிடும் செய்தி, தங்களுக்குள்ள சமூக அக்கறையையும் தரமான படைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சீரிய சிந்தனையையும் என்னால் உணர முடிந்தது. ஒருகாலத்தில், அகவை முதிர்ந்த அறிஞர்கள் மட்டுமே விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இன்று அந்நிலை அரசாங்கத்திலும் சரி, தனியார் நிறுவனங்களிலும் சரி, மாறிவருவதை நாம் உணர வேண்டும்.

சமீபத்தில், தமிழக அரசின் விருது பெற்றவர்களில் பலர் இளைஞர்களே. திறமை மிக்க பலர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களை அரசாங்கம் எல்லா நேரத்திலும் தேடி அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அப்படி அங்கீகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அரசின் பணியாக இருந்தால், தகுதியான இன்னும் பலர் சிறப்பிக்கப்படுவார்கள் என்பதும் உண்மையே.

அறிஞர்களைப் போற்றுவதில் அரசுக்குள்ள பொறுப்பு, தமிழ் வளர்க்கும் மன்றங்களுக்கும் உண்டு. இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள், அதில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நீக்கிவிட்டு, அச்செலவில், அறிஞர் ஒருவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கலாம். பொழுதுபோக்குக்காகப் பேசுபவர்களைவிட, பொறுப்புணர்ச்சியோடு எழுதியவர்கள் போற்றப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் ‘தமிழ்ப் பேராயம்’என்ற அமைப்பு, மொழி வளர்ச்சிக்கான முக்கியப் பணிகளை ஆற்றுவதோடு, நாடெங்கும் உள்ள நல்லறிஞர்களை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. 12 தலைப்புகளில் 22 லட்சம் ரூபாய்க்கான விருதுகளை வழங்கிவருகிறது. ஒவ்வொரு விருதுக்கும் தலா ரூ. 1.5 லட்சம் வழங்கப்படுகிறது. சிறந்த தமிழறிஞருக்கு ரூ. 2 லட்சமும், வாழ்நாள் சாதனையாளருக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்படுகிறது.

இதில் முக்கியமான செய்தி, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்ப் பேராயத்தின் புரவலர் இதில் தலையிடுவதில்லை. மூன்று கட்டங்களில் செய்யப்படும் தேர்வுகளின் மூலம், எவ்விதப் பரிந்துரைகளுக்கும் இடம்தராமல், தகுதியானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றன. பிற தனியார் பல்கலைக்கழகங்களும் இதைப் பின்பற்றினால் இன்னும் பல தகுதியான படைப்பாளர்களும் சிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

- முனைவர் கரு.நாகராசன், செயலர்,
தமிழ்ப் பேராயம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.



சந்தேகங்களுக்கு விடை

சீனப் போரின் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் தகுந்த பதில் கொடுத்துள்ளது, ‘1962 சீனப் போரில் விமானப் படையைப் பயன்படுத்தாதது ஏன்?’ (நவ.24) கட்டுரை. அப்போரில், விமானப் படையைப் பயன்படுத்தாதது தவறு என்றொரு குற்றச்சாட்டு அப்போதைய காங்கிரஸ் அரசின் மீது தற்போது வரை கூறப்பட்டுவருகிறது. ‘அப்போரில் நமது விமானப் படை பயன்படுத்தப்பட்டிருந்தால், பதிலடியாக சீன விமானங்கள் கல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி, இந்தியத் தரப்பில் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவே, விமானப் படை பயன்படுத்தப்படவில்லை’என்ற தகவல் பல சந்தேகங்களுக்கு விடை தருவதாக இருந்தது.

- எம்.மலர்க்கொடி, பர்கூர்.



உழைப்பே உயர்வு

நவ.24ம் தேதி வெளியான ‘தள்ளாத வயதிலும் தளராது உழைக்கும் படகோ(பா)ட்டி’யின் நிலை கண்டு மனம் படபடத்தது. உலகின் ஒட்டுமொத்த மனிதவளத்தில் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில், உழைப்பவர் ஒருவர், அதைச் சுரண்டிப் பிழைப்பவர் பலர் என்ற நிலை மாற வேண்டும். இந்தப் பாட்டியைப் போல எல்லோருமே உழைத்தால் நாட்டின் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும்.

- சண்முகநாதன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்