படித்த இந்தியர்களின் எஜமான விசுவாசம் பற்றிய நம்பிக்கை ஆங்கிலேயருக்குக் கிடையாது. அதனால் நடத்தை முதல் எல்லாவற்றுக்கும் கெசட்டெட் ஆபீஸர் ஒருவருடைய சான்றோ, அல்லது மேற்கையொப்பமோ பெறச் சொன்னார்கள். பதிவுபெற்ற அந்த அதிகாரிகள் யாரும் விடுதலை இயக்கத்தோடு தொடர்புகொண்டிருக்க மாட்டார்கள் என்பது அவர்களது கணிப்பு. விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் அம்முறை தொடர்வது அவமானத்துக்குரியது. பள்ளிப் பொதுத் தேர்வுகளில், பத்தாயிரத்தில் ஒருவரே பிடிபடுவது அபூர்வமாக இருக்கிறது. ஆனால், லட்சக்கணக்கானோரும் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே நடத்தப்படுகின்றனர். இன்று செல்லாக் காசுக்கு மாற்றுத் தாள் வாங்க வருவோருக்கு மையிடுவதும் இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே. என்றைக்கு நாமே நம் மக்களை நம்பப்போகிறோம்?
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
கள்ள ஓட்டைத் தடுத்து நிறுத்த விரலில் மை வைப்பதை எதிர்க்காத நாம், நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவரும் கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கையில் மை வைப்பதைக் கண்டிப்பது மட்டும் சரியா? கறுப்புப் பண முதலைகள், அதனை வெள்ளையாக்க ஏழை பாழைகளைப் பணத்தாசை காட்டி புதிய நோட்டை மாற்ற வைப்பதைத் தடுத்து நிறுத்தவே இந்த மை வைக்கும் நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளதைப் புரிந்துகொண்டு, நாம் ஆதரிக்க வேண்டும். ஊழல் பேரரசர்களைத் தேர்ந்தெடுக்கக் கையில் மையிட்ட நாம், அவர்களைத் தண்டிக்க இன்னொரு முறை மையிடுவதில் என்ன தவறு? இதில் மக்களைக் கேவலப்படுத்தும் நடவடிக்கை எங்கே இருக்கிறது?
- தொ.ச.சுகுமாறன், வேலூர்.
இருவருக்கும் உரிமையில்லை
எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது..? - (நவ 16) கட்டுரையாளரின் கோணம் தவறானது. எம்ஜிஆர் ஒன்றும் வீரமணி வகைப்பட்ட திராவிடக்காரரும் அல்ல; ராமகோபாலன் வகைப்பட்ட இந்துத்வவாதியும் அல்ல. அவர் எல்லா மக்களையும் சமமாக நேசித்தவர். மூகாம்பிகை கோயிலுக்குப் போனதாலேயே எம்ஜிஆர் இந்துத்வ மனோபாவம் உள்ளவராகிவிட மாட்டார். இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் எம்ஜிஆர் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்தது உண்மைதான். ஆனால், அதைத் திரும்பப் பெற்றுவிட்டாரே? உண்மையைச் சொல்லப்போனால், எம்ஜிஆரை உரிமை கொண்டாட திராவிடர் கழகம், ஆர்எஸ்எஸ் இரண்டுக்குமே தார்மீக உரிமை இல்லை. அவர் எல்லாருக்குமானவர்!
-கே.எஸ்.முகம்மத் ஷூஐப், காயல்பட்டினம்.
தண்டிக்கப்பட வேண்டும்
கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.650 கோடி செலவில் இன்று (நவ.16) பெங்களுரு அரண்மனையில் மிகவும் ஆடம்பரமாக நடைபெறுகிறது என்றும் சுரங்க மோசடி வழக்கில் சிக்கி, 2011-ல் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்த நிலையில், எப்படி ரூ.650 கோடி புரட்ட முடிந்தது? அதற்குத் துணை போனவர்கள் யார்? வெளிப்படையாக, இத்தகைய அநியாயம் செய்ய அவரால் முடிகிறது என்றால், அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசுக்கு அழகல்ல. ஏழைகள் வரிசையில் நிற்கிற இந்தக் காலத்தில், இவர்களைப் போன்றோர் தண்டிக்கப்பட வேண்டாமா?
-தா. சாமுவேல் லாரன்ஸ், பேராசிரியர் (ஓய்வு), மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago