சாதனையா.. சோதனையா?

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு தீபாவளியின்போது, டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.350 கோடி வருமானம் கிடைத்ததையும், இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்காமலே மது விற்பனை ரூ.370 கோடியைத் தாண்டிவிட்டது என்றும் வெளிவந்துள்ள செய்தியைப் படித்தேன் (31.10.16). 500 கடைகளை மூடிய பிறகும், டாஸ்மாக் மூலம் அரசு பெறும் வருமானம் கூடிக்கொண்டேபோவது, குடிக்கு அடிமையாவோர் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகிக்கொண்டே வருகிறது என்பதற்குச் சான்று. எதிர்கால இளைஞர் மற்றும் மாணவ சமுதாயம், போதையின் வழியில் பயணிக்குமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. வருடா வருடம் மது அருந்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்திட, ஒரு புதிய இலக்கு வகுத்துக்கொண்டால் மட்டுமே, மதுவால் சீரழிந்துவரும் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.



எளிமையாக உள்ளது

தமிழை அதன் இயல்பழகு கெடாமல் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ‘இதுவும் அதுவும் மற்றும் முதலான ஆகிய வையும்’ என்கிற ‘அறிவோம் நம் மொழியை..’ கட்டுரை தெளிவாகச் சொல்கிறது (31.10.16). ‘பிற மொழிகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் சொல்லோ, வழக்கோ, நடைமுறையோ மொழிக்கு ஏதேனும் ஒருவகையில் வளம் சேர்க்க வேண்டும்’ என்று தெளிவுறுத்தி உள்ளார் அரவிந்தன். தமிழைச் சரியாக எழுதுவது எப்படி என்று பல புலவர்கள் எழுதியுள்ளனர். ஆனால், இவரது எழுத்து எளிமையாக உள்ளது.

- கோ.மன்றவாணன், கடலூர்.



நேருவும் ராஜீவும்

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகளை வலிமைப்படுத்த முயன்றது குறித்து வந்துள்ள ‘உள்ளாட்சி, உள்ளங்களின் ஆட்சி’ தொடர் (29.10.16) அவருடைய மதிப்பை மேலும் உயர்த்தியது. “இந்தியத் தாய் என்பது ஒரு பெண்ணோ அல்லது ஒரு தெய்வீகக் குறியீடோ அல்ல. மாறாக, உண்மையான இந்தியத் தாய் என்பது நாட்டு மக்களே” என நேரு தெரிவித்தது இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அவர் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதற்குச் சான்று. அவரால் அத்தகைய பெரும் அதிகாரப் பரவலைச் சாதிக்க முடியவில்லை என்றாலும்கூட, பின்னாளில் அவரது பேரனான ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்யத்தை நனவாக்கியது வரலாறு.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.



இந்தியப் பெருமிதம்

பி.ஏ.கிருஷ்ணன் எழுதும் ‘வல்லரசின் ஜனநாயகம்’ எனும் புதிய தொடரை வாசித்தேன் (31.10.16). 1776 ஜூலை 4-ல் விடுதலை பெற்ற அமெரிக்கா 1778-ல் அரசியல் சாசனம் வகுக்கிறது. “அரசுகள் மனிதர்களால் அமைக்கப்படுகின்றன. அவற்றின் அதிகாரங்கள் ஆளப்படும் மனிதர்களின் ஒப்புதலுடன் பெறப்படுகின்றன” என்ற சொற்றொடர் அருமை. பழங்குடியினர், பெண்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போன்றோருக்கு அமெரிக்கா மிகமிகத் தாமதமாகவே ஓட்டுரிமை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சாசனம் 1949-ல் எழுதப்படும்போதே அனைவருக்கும் ஓட்டுரிமையைத் தந்தது எனும் செய்தி, நாமே மனிதர்களை மதிக்கக் கற்றுத் தந்தவர்கள் என்ற பெருமிதத்தை ஏற்படுத்தியது.

- ப.தாணப்பன், திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்