தனித் தனியாக நுழைவுத் தேர்வு எதற்கு?

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதாசாரத்துக்குத் தக்கபடி, மருத்துவம் உள்ளிட்ட போட்டி அதிகமாக உள்ள உயர்படிப்புகளைப் பிரித்து வழங்க வேண்டும். அதில் பிளஸ் 2 மதிப்பெண் வரிசைக் கிரமப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அதுவே நியாயம். அதுவே சமூக நீதி.

தமிழ்நாட்டில் 10 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 எழுதுகிறார்கள் என்றால், அதில் 7 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்றால், 70% இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரப்பட வேண்டும். இத்தகைய சேர்க்கை முறையைப் பின்பற்றுவதால் சுமார் 3,000 மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக ஒட்டுமொத்தத் தமிழகமும் 50,000 இடங்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுவதும், அதற்காக எந்த இழப்புகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதும், பள்ளிக் கல்வி தனியார்மயத்தால் ஒட்டுமொத்தப் பள்ளிக் கல்விமுறையும் சீரழிந்துபோவதைத் தடுத்து நிறுத்தவும் முடியும்.

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு மட்டுமல்ல, பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்குத் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் வைக்கும் எழுத்துத் தேர்வு வடிவிலான நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. ஒவ்வொரு படிப்புக்கும் தனித் தனியாக நுழைவுத் தேர்வு என்றால், பிளஸ் 2 தேர்வு எதற்கு? மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லாக் கல்லூரிகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வாக பிளஸ் 2 தேர்வு மட்டுமே இருக்க முடியும். அதன் மதிப்பெண்ணை எல்லா நிறுவனங்களின் நுழைவுக்கான ஒரே தகுதித் தேர்வாகக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியும் அந்தக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணைத் தர வரிசைப்படுத்திச் சேர்க்கையை மேற்கொள்ளும்படி கூறலாம். மாணவர்கள் இந்தத் திட்டத்தால் மிகவும் பயன் பெறுவர். இதைப் போலவே மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம் சேர்ந்து ஒரே நுழைவுத் தேர்வை நடத்தும் முறையும் வரவேண்டும்.

பேரா.நா.மணி, பொருளாதாரத் துறைத் தலைவர், ஈரோடு கலைக் கல்லூரி.





தேவை புதிய அரசியல்!

தமிழகத்தில் அரசியல் மோசமாகிவிட்டது. மாடுகளுக்கு விலை பேசுவதுபோல, வாக்குகளை விலை பேசும் மாட்டுத் தாவணி அரசியலாக மாறிவிட்டது. குறைகளுக்குக் குறைவில்லை. காந்திய நேர்மையோடு ஒரு புதிய அரசியல் உருவாக வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் சங்கம், விவசாயிகள் சங்கம். தொழிலாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து மாற்று அரசியலை உருவாக்கலாம். 2021 சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்தும் செயல்படலாம்.

- எஸ்.ரத்தினவேலு, சங்கரன்கோயில்.



பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு

வணிக வீதி மற்றும் கருத்துப் பேழை எனத் தொடர்ந்து இரு நாட்களாக மெட்ரோ போக்குவரத்து குறித்த தகவல்களைப் படித்தேன். கொல்கத்தா மெட்ரோ போக்குவரத்து நஷ்டத்தில் இயங்கிவருவது அதிர்ச்சியளிக்கிறது. டெல்லி மெட்ரோவாவது லாபம் ஈட்டுகிறதா? தமிழகத்தைப் பொறுத்தளவில் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் பொதுப் போக்குவரத்து முறைகளை, குறிப்பாக அரசுப் பேருந்துகளை அவ்வளவாகப் பயன்படுத்துவதுமில்லை, விரும்புவதுமில்லை.

சொகுசு மற்றும் விரைவு கருதி அரசுப் பேருந்துகளை பெரும்பாலானோர் புறந்தள்ளுகின்றனர். அந்த மனநிலையில் முதலில் மாற்றம் ஏற்பட அரசுதான் வழிசெய்ய வேண்டும். அது நிகழுமானால், மெட்ரோ நிலையங்களை இதர பொதுப் போக்குவரத்து முறைகளால் எளிதில் அடையும்படி செய்வதே மக்களுக்குப் பயன் தரும். எதிர்காலச் சூழலுக்கும் அதுவே பயன் தரும்.

- தமிழ், மின்னஞ்சல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்