பெரியார் தன்னுடைய இயக்கத்தினுள் ஜனநாயகத்துக்கு இடம் அளிக்காதவர் என்று ‘நீங்கள் எந்த சாரி’ கட்டுரை குறிப்பிடுகிறது. பெரியாரைப் பற்றி அவ்வப்போது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தபோதிலும் இது உண்மைக்கு மாறான கருத்து என்பது பெரியாரை நன்கு அறிந்தவர்களுக்குப் புரியும். பெரியார் சுதந்திர நாளைத் துக்க நாளாக அறிவித்தபோது, அதில் மாறுபட்ட அண்ணாவின் கருத்துக்கு மதிப்பளித்தவர் பெரியார்.
மாற்றுக்கருத்து கொண்ட அண்ணாவின் கட்டுரைகள் அன்றைக்கு விடுதலையில் சுதந்திரமாக அச்சேறியதை யாரும் மறுக்க முடியாது. ‘நான் கட்சிக்காரன் இல்லை; கொள்கைக்காரன்’என்றார் பெரியார். தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத தந்தை பெரியாரின் பேச்சு கேட்பவர்களுக்குச் சில நேரங்களில் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று, அவர் தன்னுடைய இயக்கத்தினுள் ஜனநாயகத்துக்கு இடம் அளிக்காதவரோ என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது உண்மையல்ல என்பதே நிதர்சனம்!
- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை
முகத்திரை கிழிந்தது
‘தி இந்து’(10.5.2016) நாளிதழில் ‘அறிக்கைகளில் தலித் - பழங்குடிகள்’ என்ற தலைப்பில் இரா.கிறித்துதாசு காந்தி எழுதியுள்ள கட்டுரை தமிழக அரசியல் கட்சிகளின் (முக்கியமாக திமுக. அதிமுக) முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது.
- சண்முகம், கோபிசெட்டிபாளையம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago