இப்படிக்கு இவர்கள்: ஓராசிரியர் பாடத்திட்டமே வேறு!

By செய்திப்பிரிவு

ஓராசிரியர் பள்ளிகள் பற்றிய உமாமகேஸ்வரியின் கட்டுரையைப் (24.5.2022) படித்தேன். ஓராசிரியர் பள்ளிகள் இல்லாத நாடே இல்லை எனலாம். நமது நாட்டிலும் திண்ணைப் பள்ளியில் தொடங்கி பட்டிதொட்டிகள்‌வரை பரவிக் கிடக்கின்றன. இவற்றுக்கு குறைந்த மாணவர்‌ எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவையே முக்கியக் காரணிகளாகும். முந்தைய ஓராசிரியர் பள்ளிகளில் வகுப்புவாரிப் பாடத்திட்டம் கிடையாது.

மூன்றாம் அல்லது ஐந்தாம் ஆண்டு இறுதியில் மாணவர் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்சக் கற்றல் திறன்கள் மட்டும்‌ பட்டியலிடப்படும். அத்திறன்களை அடையப்பெற ஓராசிரியரே திட்டமிடுவார். ஆசிரியர்க்கு ஆசிரியர் திட்டம் வேறுபடக்கூடும்.‌ இன்று வகுப்பிற்கொரு ஆசிரியர் இருப்பதுபோலவே ஓராசிரியர் பள்ளிகளிலும் பாடமுறை இருப்பது முரணாகும். நெகிழ்வுத்தன்மை தேவை. ஓராசிரியரது ஆசிரியர் பயிற்சி முறை மாறுபட்டது.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்