வரவேற்கத்தக்கதே!

By செய்திப்பிரிவு

அன்புமணியின் பேட்டி தெளிவாக உள்ளது. ஆனால், திமுக ஆட்சி முடியும்போது இருந்த ரூ.1.01 லட்சம் கோடி கடன், அதிமுக ஆட்சி முடியும்போது 2.47 லட்சம் கோடியாகிவிட்டது என்கிறார். இதில் திமுக வைத்துவிட்டுப்போன கடனுக்கான ஐந்து ஆண்டுகால வட்டியும் அடங்கும் என்பதை மறைத்துவிட்டார் அன்புமணி. அதிமுக, திமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் என்பவர், மாறி மாறி கூட்டணி வைத்து அக்கட்சிகள் மேலும் வலுப்பெறக் காரணமாக இருந்ததற்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறார்?

எல்லோருக்குமான கட்சி பாமக என்பது உண்மையானால், பெரும்பான்மை சாதி மக்கள் வசிக்கும் தொகுதிகளில், சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்தவர்களை அல்லவா வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க வேண்டும்? இப்படிச் சில விமர்சனங்கள் இருந்தாலும், வேளாண் துறை குறித்த அவருடைய கருத்துகள், திட்டங்கள் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதே. அதுபோல பாமக-வில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வரவேற்க வேண்டியதே!

- ஜே.ராஜகோபாலன், நெய்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

27 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்