பெரியாரும் வைகோவும் ஒன்றா?

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி மீதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வசை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையில், பெரியார், திராவிடர் இயக்கம் தொடர்பான சில குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. சாதி ஆணவத்தில் வன்மத்துடன் பேசிய வைகோவின் பேச்சையும் சாதி ஒழிப்புக்காகக் காலமெல்லாம் பேசிய பெரியாரின் பேச்சையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட்டு எழுதுவது முறையற்றதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

சாதி ஆணவக்காரர்களைக் காலம் முழுவதும் எதிர்த்துப் பேசியவர் பெரியார். இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே பெரியார் எரித்திருக்கிறார். சாதி ஒழிப்புதான் அடிப்படை நோக்கமாக இருந்திருக்கிறது. அதேபோல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் மீதும் கட்டுரை குற்றம் சுமத்துகிறது. திராவிட என்ற பெயருள்ளதெல்லாம் திராவிட இயக்கம் என்று கட்டுரையாளர் கருதிவிட்டார் போலும். சாதி ஒழிப்பை மையக் கொள்கையாகக் கொண்டவையே திராவிட இயக்கங்களாக இருக்க முடியும். தமிழகத்தில் இன்றைக்குச் சாதி ஒழிப்பு, சமூகநீதிப் பயணத்தில் நாம் கடந்து வந்திருக்கும் தொலைவில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் உழைப்பின் பலன் என்பதை யாரும் மறுக்க முடியாது.

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்