நாங்கள் நம்ப வேண்டுமா?

By செய்திப்பிரிவு

மது ஒழிப்பு குறித்த ஜெயலலிதாவின் வாக்குறுதியைப் படித்தேன். மதுக் கடைகள் தமிழகத்தில் வளர திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பங்கு இருந்தாலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, மது ஒரு பிரச்சினையாக மாறப் பெரும் பங்கு வகித்தது. எதிர்ப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியதுடன், கடைகளுக்கும் மது அருந்துபவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தந்தது. சட்டமன்றக் கூட்டங்களில்கூட முதல்வரும் அமைச்சர்களும் “டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகி அதன்மூலம் எராளமான உயிர்கள் பலியாகிவிடும்” என்றும் “அதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்றும் கூறினர்.

தற்போது தேர்தலுக்காக அவர்கள் மது ஒழிப்பை முன்னிறுத்துவது வேடிக்கையாக உள்ளது. படிப்படியாக மதுவிலக்கைச் செய்வாராம். கூடவே, மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவாராம். குடியால் சிதைந்த குடும்பங்களுக்கு நீங்கள் என்ன மருத்துவம் செய்ய முடியும்? இழந்த உயிர்களை மீட்டுக் கொண்டு வர முடியுமா? இவற்றையெல்லாம் நாங்கள் நம்ப வேண்டுமா?

- பேராசிரியர் செ.சேவியர்,
பெரியார் ஈ.வெ.ரா. தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்