யார் கல்வியாளர்?

By செய்திப்பிரிவு

கல்வி பற்றிச் சிந்தித்து விளைந்த சித்தாந்தங்களைச் செயல்படுத்துபவரே கல்வியாளர்; ஆசிரியர்களோ, கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களோ அல்ல. கூட்டங்களில் மூத்த கல்வியாளர் என்று என்னை அறிமுகப்படுத்தும்போது அதனை நான் திருத்துவேன். வயது காரணமாக மூத்தவர் என்பது சரியென்றாலும், கல்வியாளருக்கான தகுதி என்னிடம் இல்லை. வேண்டுமென்றால், நல்ல ஆசிரியன் என்று கூறுங்கள் என்பேன். தாகூர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரல்லர்; ஆனால் கல்வியாளர்.

அதுபோலவே காந்தியடிகளும் கல்வியாளர். உலகுக்குக் குழந்தைக் கல்வி பற்றிய தெளிவை அளித்த மாண்டிசோரி சிறந்த கல்வியாளர். நர்சரிப் பள்ளிகளை நடத்துபவரெல்லாம் கல்வியாளர்கள் ஆக மாட்டார்கள். கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் கல்வியாளர் எனக் கூற முடியாது. கல்விப் பிரச்சினைகளைப் பற்றி சரியான புரிதலோடு ஒரு புதிய மார்க்கத்தை உருவாக்குபவர்களை மட்டும் கல்வியாளர் என அடையாளப்படுத்தலாம்!

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்