ஒரு கம்யூனிஸ்ட்டின் பதில்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் ஏற்பட்ட, நீண்ட காலப் பட்டறிவு வாயிலாக ‘வசந்திதேவியும் ராமச்சந்திரனும்’ கட்டுரை எழுப்புகிற கேள்விகளுக்கு, நான் கண்டறிந்த பதில் இதுதான். பொதுவுடமைக் கட்சிகளானது ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது உள்ளாட்சி அமைப்புகளைத் தன்னுடையதாக்கிக் கொண்டபிறகு, கொள்கை சார்ந்து அவை அப்பகுதியில் இயங்குவதில்லை. கட்சியின் முடிவு என்று சொல்லியே நியாயமான எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் விடுகிற அவலம் இன்றும் உள்ளது. இயல்பாகவே அதிகாரம் கைகூடும்போது, ஆணவம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகிறது.

இந்தத் தேர்தலில் பொதுத் தொகுதிகளில் சில தலித்துகளை நிறுத்தியுள்ளது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால், எத்தனையோ கிராமங்களில் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்தபோதும், பொதுப் பிரிவு என்பதற்காக கட்சிக்காக உழைக்காத இடைநிலைச் சாதியினருக்குப் பொறுப்பு வழங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இரு பொதுவுடைமைக் கட்சியிலும் தத்துவம் சார்ந்த புதுப்பிப்பு சோடை போனதாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

- ம.ஜீவானந்தம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்