இந்திய விவசாயிகளின் அவல நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது ‘இனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப் போவதில்லை!' என்ற கட்டுரை. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள்தான் என்று சொல்லி ஆட்சிக்கு வருபவர்கள், எடுத்த எடுப்பிலேயே விவசாயிகளின் முதுகெலும்பைத்தான் உடைக்கிறார்கள். மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மானியத்தை நேரடியாக வழங்குகிறோம் என்று சொல்லி, விவசாயிகளுக்கான உரம், பூச்சிமருந்துகளுக்கான மானியத்தை வெட்டியது. 2013-ம் ஆண்டில் ரூ.17,778 கோடியாக இருந்த விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு, இவ்வாண்டு ரூ.11,657 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கங்கையைச் சுத்தப்படுத்தும் இந்துத்துவத் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கிய மோடி அரசு, நீர்ப்பாசனத் திட்டத்துக்கான நிதியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் கோடியைக் குறைத்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயிகளின் தற்கொலை 26% அதிகரித்துள்ளது. அன்று சாஸ்திரி ஆட்சியில் பாகிஸ்தானுடனான போரின்போது “சிப்பாய்கள் வாழ்க.. விவசாயிகள் வாழ்க!” (ஜெய் ஜவான்… ஜெய் கிசான்!) என்று முழங்கினர். ஆனால், இன்று மோடியின் ஆட்சியில் அமெரிக்க மேலாதிக்கப் போருக்கான சேவைக்கும், தென் ஆசிய விரிவாதிக்க நலன்களுக்காகவும் ராணுவத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, விவசாயத்துக்கு நிதியைக் குறைத்து சிப்பாய்கள் வாழ்க! விவசாயிகள் ஒழிக! என்று முழங்குகின்றனர்.
- மா.சேரலாதன், தருமபுரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago