திருமாவளவனின் யதார்த்தமும் உண்மை நிலையும்

By செய்திப்பிரிவு

திருமாவளவனின் நான்காவது நாள் பேட்டியில், “நெருங்கிப் பழகுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் எப்படி? சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கான பதிலில், “ஜெயலலிதாவுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால், கருணாநிதியுடன் அரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் நெருக்கம் இருந்தது” என்ற திருமா, “திமுகவுடன் ஏன் இணைந்திருக்க முடியவில்லை” என்ற கேள்விக்கு, “எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்” என்ற வார்த்தைகளில் தெரிந்த விரக்தியை உணர்ந்துகொள்ள முடிந்ததோடு, திருமாவின் அரசியல் நாகரிகத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

திருமாவின் பதில்களில் காண முடிந்த யதார்த்தமும் உண்மை நிலையும் வெற்று அரசியல் கோஷத்தைத் தாண்டிய அவரின் பார்வையையும் வெளிக்கொணர்ந்தது பேட்டியாளரின் அற்புதமான கேள்விகள்தான். ஒரு தமிழ் நாளிதழ், அதுவும் நடுப்பக்கத்தில், ஐந்து நாட்களாகத் தொடர்ந்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் அதுவும் தலித் கட்சியைச் சேர்ந்த தலைவரின் பேட்டியைப் பிரசுரித்தது ‘தி இந்து’வினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நிருபித்துள்ளீர்கள்.

- வீ.சக்திவேல், டி.கல்லுப்பட்டி.



‘தி இந்து’வின் மகத்தான பணி

சாதியச் சமூகம் திருமாவளவன் என்ற ஜனநாயக சமூகப் போராளியை வெளிக்கொண்டு வந்ததுபோல, தொடர் நேர்காணல் மூலம் திருமாவளவனின் பன்முகத் தன்மையை ‘தி இந்து’ வெளிக்கொணர்ந்துள்ளது. தொடரட்டும் ‘தி இந்துவி’ன் சிறப்பான, மகத்தான பணிகள்!

- ஜா.ஸ்டேன்லி தேவகுமார், திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்