தவறுகள் இல்லாத வினாத்தாள்கள் மாணவரது உரிமை. தவறான வினாவைக் கொடுத்துவிட்டு, பின்னர் மதிப்பெண் வழங்கும் முறை சிலருக்கு அதிக பயனும், அவ்வினாவைத் தவிர்த்த மாணவர் மதிப்பெண் இழக்கவும் நேரிடும். தேர்வுத் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் எல்லா வினாத்தாள்களையும் ஒப்பச்சு பார்க்கின்றார் என்று அறிகின்றேன். வினாத்தாள் தயாரிக்கும் பணியில் பாடம் அறிந்தவர் ஈடுபடுத்தப்படுவதில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. நான் ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது வினாவில் தவறு இருந்தால், வினாவில் இக்குறை உள்ளதால் இதற்கு விடையளிக்க இயலாது என்றோ, விடுபட்ட எண்ணை இவ்வாறு எடுத்துக்கொண்டு விடையளித்துள்ளேன் என்றோ தேர்வாளர் குறிப்பிட்டால்தான் அவ்வினாவிற்குரிய மதிப்பெண் தரப்படும்.
இம்முறையினின்று வெகுவாக விலகிச் சென்றுவிட்டோம். பல்கலைத் தேர்வுகளில் அவ்வினாவை ஒதுக்கி மதிப்பிடப்பட்டு, பின்னர் வினாத்தாளின் மொத்த மதிப்பெண்களுக்கு மாற்றப்படும். தவறான வினாவுக்குரிய மதிப்பெண் 10 என்றால், விடைத்தாள் 90 மதிப்பெண்களுக்கு மதிப்பிடப்பட்டு 100-க்கு மாற்றப்படும். தேர்வறையில் பதற்றத்தைக் குறைக்க வேண்டுமென்றால், பிழைகளற்ற வினாத்தாளை வழங்க வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago