விடுபட்ட சிலைகள்

By செய்திப்பிரிவு

ரசனையுடன் எழுதும் அசோக மித்திரனின் சிலைகள் பற்றிய கட்டுரையில் சென்னையின் ‘மன்றோ குதிரைச் சவாரி’ சிலை, பொது மருத்துவமனையின் ‘டாக்டர் ரங்கா சாரி’ சிலை, பூக்கடை காவல் நிலைய வளாக ‘ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சிலை’களையும் சேர்த்திருக்கலாம். சுதந்திரத்துக்கு முன்பாயினும் இச்சிலைகளின் கலை நயம் உலகத்தரம் வாய்ந்தது.

- வீ.விஜயராகவன், மின்னஞ்சல் வழியாக.



சாதி ஒழிப்பை முன்மொழிவார்களா?

சீதாராம் யெச்சூரியின் நேர்காணல் படித்தேன். அன்றைய காலகட்டத்தில் பொதுவுடமைக் கட்சியில் களமாடிய தொண்டர்கள், தலைவர்களில் பெரும்பான்மையினராக தலித்துகளே இருந்தனர். ஆனால், 80-களின் இறுதியில் இரு பொதுவுடமைக் கட்சிகளிலும் இடைநிலை சாதியினரின் ஆதிக்கம் மேலோங்கி வந்திருக்கிறது.

இடைநிலை சாதியினரின் ஆதிக்கத்தால் மெள்ள மெள்ள தலித் மக்களிடமிருந்து இரு பொதுவுடமைக் கட்சிகளும் அந்நியப்பட்டுவருகிறது. அவர்கள் அம்பேத்கர் குறித்துப் பேசினாலும்கூட தலித் பிரச்சினை குறித்த அணுகுமுறையில் போதாமைதான் இப்போதும் நிலவுகிறது. இன்று கீழத்தஞ்சை மட்டும் அல்ல, பல மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களாகப் பொதுவுடமைக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். ‘இனி ஊருக்கு ஒரே சுடுகாடு மட்டும்தான்’ என்று அவர்கள் தீர்மானித்துச் செயல்படுத்தினால் என்ன? சாதி ஒழிப்பைச் சுடுகாட்டிலிருந்து தொடங்கலாமே?

- ம. ஜீவானந்தம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்